பொன்னமராவதி அருகே ரெகுநாதபட்டி சாலையை சீரமைத்து தர வேண்டுமென கிராம பொதுமக்கள் கோரிக்கை..
பொன்னமராவதி அருகே ரெகுநாதபட்டி சாலையை சீரமைத்து தர வேண்டுமென கிராம பொதுமக்கள் கோரிக்கை..
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி தாலுகா R.பாலகுறிச்சி ஊராட்சிக்குட்பட்ட ரெகுநாதபட்டி சாலையை சீரமைத்து தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை.
கட்டுகுடிப்பட்டி கிராமத்தில் இருந்து ரெகுநாதபட்டி சீகம்பட்டி விளக்கு வரை சுமார் நான்கு கிலோமீட்டர் சாலை குண்டும் குழியுமாக சேதமடைந்த நிலையில் இருப்பதால் பொதுமக்கள் வாகன ஓட்டிகளும் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.மேலும்
பள்ளி செல்பவர்கள் வேலைக்காக வெளியூர் செல்பவர்கள் மிகவும் சிரமப்பட்டு வருவதால் சம்பந்தப்பட்ட துறையினர் நேரடியாக சாலையை பார்வையிட்டு குண்டும் குழியுமாக உள்ள சாலையை சீரமைத்து தர வேண்டும் என்று கிராம பொதுமக்கள் கோரிக்கையை முன் வைத்துள்ளனர்.



