திருக்கோஷ்டியூர் திருத்தளத்தில் தேவஸ்தான அரசு ஊழியர், ஒப்பந்தம் என்று அட்டூழியமா?

திருக்கோஷ்டியூர் திருத்தளத்தில் தேவஸ்தான அரசு ஊழியர், ஒப்பந்தம் என்று அட்டூழியமா?

  திருக்கோஷ்டியூர் திருத்தளத்தில் தேவஸ்தான அரசு அலுவலர், ஒப்பந்தம் என்று அட்டூழியமா?

   சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் To சிவகங்கை சாலையில் அமைந்துள்ள திருக்கோஷ்டியூர் கிராமத்தில் 108 வைணவ தளங்களில் ஒன்றான சௌமியநாராயண பெருமாள் மற்றும் தாயார் திருமாமகளாகவும் அருள் பாலித்து வருகின்றனர்.

  அத்திருதளத்திற்கு தினம் தினம் வழிபாட்டிற்கு பல மாவட்டங்களில் இருந்தும், பல மாநிலங்களில் இருந்தும் வந்து வழிபட்டு செல்கின்றனர்.

இதில் வேடிக்கை என்னவென்றால் ஒரு வரையறை இல்லாமல் கார் பார்க்கிங் என்ற ஒரு ரசிதை வைத்துக் கொண்டு போக்குவரத்து சாலைகள் மற்றும் டீக்கடை, உணவகங்கள் என எங்கு நிறுத்தினாலும் கண்டிப்பாகவும் அடாவடித்தனமாகவும் பணவசலில் ஈடுபடுவது பக்தர்கள் மத்தியில் பெரும் வேதனையாக உள்ளதாம்.

கோயில் தேவஸ்தான அலுவலர் முறைப்படியாக கார் பார்க்கிங் குத்தகையை ஏலம் விடப்பட்டுள்ளாரா? முறைப்படியாக அந்த வசூல் செய்யும் பணங்கள் அரசு கஜானாவிற்கு செல்கிறதா?

பத்திரிகையாளர்: வீரராகவன்