விவசாயிகளிடம் நெல்லை கொள்முதல் செய்ய தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தால் எவ்வித தொகையும் வசூல் செய்யப்படவில்லை.

விவசாயிகளிடம் நெல்லை கொள்முதல் செய்ய தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தால் எவ்வித தொகையும் வசூல் செய்யப்படவில்லை.

1. விவசாயிகளிடம் நெல்லை கொள்முதல் செய்ய தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தால் எவ்வித தொகையும் வசூல் செய்யப்படவில்லை.

2. விவசாயிகளிடம் நெல்லை கொள்முதல் செய்ய தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தால் நடத்தப்படும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் பணிபுரியும் சுமை தூக்கும் பணியாளர்களுக்கு விவசாயிகளால் எவ்வித தொகையும் வழங்க வேண்டியது இல்லை.

3. நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக பருவகால பணியாளர்கள் மாநில அரசின் கட்டுபாட்டில் பணிபுரிந்து வருகின்றனர்.

4. நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்படும் நெல் மூட்டைகளை சேமிப்பு மையங்களுக்கு எடுத்து செல்ல தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தால் நிர்ணயிக்கப்பட்ட வாடகை வழங்கப்பட்டு வருகிறது. வாடகை தொடர்பாக விவசாயிகள் எவ்வித தொகையும் வழங்க வேண்டியதில்லை.

5. விவசாயிகளிடம் நெல்லை கொள்முதல் செய்ய மூட்டை ஒன்றுக்கு தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தால் எவ்வித தொகையும் வசூல் செய்ய உத்தரவு ஏதும் பிறப்பிக்கப்படவில்லை.

6. நிரந்தர நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் இட வசதிகேற்ப உலர்களங்கள் அமைக்கப்படும்

7. நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் தூற்றி சுத்தம் செய்து தையல் இட்டு அடுக்கி வைத்து லாரியில் ஏற்றி விடும் வரை 40 கிலோ மூட்டை ஒன்றுக்கு ரூ.10/-ம் மற்றும் நெல் மூட்டைகளை சேமிப்பு மையங்களில் இறக்க டன் ஒன்றுக்கு ரூ.31.02/- பைசா வழங்கப்பட்டு வருகிறது என்பதை தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.

மேலாளர் (நிருவாகம்/கணக்கு). த.நா.நு.பொ.வா.கழகம், திருவாரூர் மண்டலம்.