தவெக அரசை கண்டித்து புதுக்கோட்டையில் ஒருங்கிணைந்த அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம், விவசாயிகள் வயிற்றில் அடிக்க கூடாது, விவசாயிகளை வங்கிக்க கூடாது விபரம் உள்ளே! கலியுக நாரதர் மாதாந்திர இதழ் வெளியீட்டாளர் மற்றும் ஆசிரியர் வீ.வீரராகவன்

தவெக அரசை கண்டித்து புதுக்கோட்டையில் ஒருங்கிணைந்த அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம், விவசாயிகள் வயிற்றில் அடிக்க கூடாது, விவசாயிகளை வங்கிக்க கூடாது விபரம் உள்ளே!  கலியுக நாரதர் மாதாந்திர இதழ் வெளியீட்டாளர் மற்றும் ஆசிரியர் வீ.வீரராகவன்

தவெக அரசை கண்டித்து புதுக்கோட்டையில் ஒருங்கிணைந்த அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம், விவசாயிகள் வயிற்றில் அடிக்க கூடாது, விவசாயிகளை வங்கிக்க கூடாது, காவிரி மற்றும் மேகதாது பிரச்சனைக்கு உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் உள்ளிட்ட வாசகங்களுடன் பதாகைகளை கையில் ஏந்தி தவெக அரசையும் முதலமைச்சர் ஜோசப் விஜய்யும் கண்டித்து முழக்கங்கள் எழுப்பி போராட்டம்

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே ஒருங்கிணைந்த அதிமுக சார்பில் விவசாயிகளின் பயிர் கடனை முழுமையாக தள்ளுபடி செய்யாத தவெக அரசை கண்டித்தும் காவிரியில் தமிழ்நாட்டுக்குரிய பங்கிட்டு நீரை உரிய முறையில் பெற முயற்சி எடுக்காததை கண்டித்தும் மேகதாது பிரச்சனையில் மெத்தனமாக செயல்படும் தவெக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் விவசாயிகள் வயிற்றில் அடிக்க கூடாது, விவசாயிகளை வஞ்சிக்க கூடாது, சிறு குறு விவசாயிகளின் பயிர் கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும், அனைத்து விவசாய சங்க தலைவர்களையும் அழைத்து பேச வேண்டும், அனைத்து கட்சி கூட்டத்தை உடனடியாக கூட்ட வேண்டும், காவிரி உரிமையை மீட்டெடுக்க வேண்டும், 24 மணி நேரமும் மும்முனை மின்சாரத்தை வழங்கிட வேண்டும் உள்ளிட்ட வாசகம் அடங்கிய பதாகைகளை கைகளில் ஏந்தி முழக்கங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தில் அதிமுக செய்தி தொடர்பாளர் கல்யாணசுந்தரம் கலந்துகொண்டு தவெக அரசை கண்டித்து கண்டன உரையாற்றினார்.

கலியுக நாரதர் மாதாந்திர இதழ் வெளியீட்டாளர் மற்றும் ஆசிரியர் வீ.வீரராகவன்