புதுக்கோட்டை மாவட்டம் & தாலுகா வடவாளம் பஞ்சாயததில் தெற்கு ராயப்பட்டி, வடக்கு செட்டியாப்பட்டி கிராமத்தில் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆய்வு மேற்கொண்டார். 7 வருடத்திற்கு முன்பு வெளிவந்த செய்தி; பத்திரிகையாளர்; வீ.வீரராகவன்
புதுக்கோட்டை மாவட்டம் & தாலுகா வடவாளம் பஞ்சாயததில் தெற்கு ராயப்பட்டி, வடக்கு செட்டியாப்பட்டி கிராமத்தில் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆய்வு மேற்கொண்டார்.
25 வருடத்திற்கு முன்பு வடவாளம் பஞ்சாயத்தில் அப்போதைய முதலமைச்சரும் அஇஅதிமுக பொதுசெயலாளரும டாக்டர் புரட்சி தலைவி ஜெ.ஜெயலலிதா அவர்களை தலைமை செயலகத்திற்கு சென்று பார்ப்பதற்காக சென்னை சென்று பார்த்து விட்டு ஊர் திரும்பி வரும்போது மிகப் பெரிய கோர விபத்து நடந்து 15 ற்கும் மேற்பட்டோர் உடல் நசுங்கி இறந்தனர் வடவாளம் பஞ்சாயத்தே சோகத்தில் ஆழ்ந்தது இதை அறிந்த அதிமுக பொதுசெயலாளரும் அப்போதை முதலமைச்சர் டாக்டர் புரட்சித்தலைவி ஜெ.ஜெயலலிதா அவர்கள் தம்மை பார்க்க வந்து விட்டு வீடு திரும்பிய போது உடல் நசுங்கி இறந்துவிட்டதை அறிந்து வருத்தப்பட்டு அவர்களுக்கு உடனே அஞ்சலி செலுத்த வேண்டும் என்று பல நிகழ்ச்சிகளை நிருத்தி வைத்துவிட்டு வடவாளம் பஞ்சாயத்து தெற்கு ராயப்பட்டி கிராமத்திற்கு டாக்டர் ஜெ.ஜெயலலிதா நேரில் வந்து இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தி குடும்பத்தார்களுக்கு ஆறுதல் கூறிவிட்டு சென்றார் ஜெ.ஜெயலலிதா தெற்கு ராயப்பட்டி கிராமம் வந்து செல்லும் போது எப்படி அந்த பஞ்சாயத்து இருந்ததோ அதே நிலைமையில் தான் உள்ளது
அப்போதும் சரிஅதன் பிறகும் சரி அதிமுக தான் புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதிஉறுப்பினர் இந்த ஒரு முறை மட்டும் திமுக சட்டமன்ற தொகுதியாக மாற கோஷ்டி பூசல் காரணமாக ஆகிவிட்டது
27 ஆண்டுகளில் இதுவரை மாவட்ட ஆட்சித் தலைவர், சட்டமன்ற உறுப்பினர்கள்,தமிழக அமைச்சர்கள், நாடாளமன்ற உறுப்பினர்கள் என எவரும் இதுவரை வந்தது இல்லை என்று மக்கள் கருத்து கூறுகின்றனர்
கஜாபுயல் காரணமாக பல கோரிக்கைகளுக்குப்பின் வடவாளம் பஞ்சாயத்து தெற்கு ராயப்பட்டி கிராமத்தில் மாண்புமிகு போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் நேரடியாக மக்களிடம் மழை பெய்ததையும் பொருட்படுத்தாமல் மக்களின் கோரிக்கைகளை ஏற்று கொண்டு மணிப் பள்ள வழிச்சாலையில் அரசு பேருந்து வசதி, அனைத்து கிராமங்களுக்கும் சாலை வசதி, குடிநீர் வசதி, சுகாதார வசதி என அனைத்தும் தமிழக முதலமைச்சரிடம் ஒப்புதல் பெற்று கொண்டு அனைத்து வசதிகளும் செய்து தரப்படும் என மக்களிடம் வாக்குறுதி அளித்தார் கஜாபுயலால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் அனைத்து நிவாரணமும் தமிழக அரசு ஏற்படுத்தி தரும் என வாக்குறுதி அளித்து விட்டு சென்றார்
பொதுமக்கள் கருத்து; புரட்சி தலைவி ஜெ.ஜெயலலிதா அவர்களுக்குப் பின் வடவாளம் பஞ்சாயத்து தெற்கு ராயப்பட்டி கிராமத்திற்கு ஒரு அமைச்சர் வந்து ஆறுதல் கூறிவிட்டு சென்றார் என்றால் அது ஒருவர் தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மட்டும் தான் என்று மக்கள் பெருமையாக கூறி சென்றனர்
நிருபர் : வீரராகவன்



