புதுக்கோட்டை மாவட்டத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.மு.அருணா, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.மு.அருணா, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.மு.அருணா, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று (27.10.2025) நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது;
பொதுமக்களின் குறைகளை மனுக்களாக பெற்று தீர்வு காணும் வகையில், வாரந்தோறும் திங்கட்கிழமைகளில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்று வருகிறது.
அதனடிப்படையில் இன்றையதினம் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், முதியோர் உதவித்தொகை, வேலைவாய்ப்பு, கல்வி உதவித்தொகை, பட்டாமாறுதல் போன்ற பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 590 மனுக்களை பொதுமக்கள் அளித்தனர். இம்மனுக்களின் மீது விசாரணை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அரசு அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும், தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பாக, புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த பள்ளி, கல்லூரி மாணாக்கர்களிடையே பேச்சாற்றலையும், படைப்பாற்றலையும் வளர்க்கும் நோக்கில் மாவட்ட அளவில் கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகள் பள்ளி மற்றும் கல்லூரி மாணாக்கர்களுக்கு 14.10.2025, 15.10.2025 அன்று நடைபெற்றது. பள்ளி, கல்லூரி மாணாக்கர்களுக்கு தனித்தனியே முதல் பரிசாக ரூ.10,000/- இரண்டாம் பரிசாக ரூ.7,000/-மூன்றாம் பரிசாக ரூ. 5,000/- என மொத்தம் ரூ. 1,32,000/-க்கான பரிசுத்தொகைக்கான காசோலைகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. இப்போட்டிகளில் முதல் பரிசு பெற்ற மாணாக்கர்கள் 28.10.2025 அன்று சென்னையில் நடத்தப்பெறும் மாநில அளவிலான போட்டிகளில் பங்குபெறுவார்கள்.
மேலும், மாற்றுத்திறனாளி நலத்துறையின் சார்பில், ஒரு மாற்றுத்திறனாளிக்கு ரூ.1,200 மதிப்பிலான பிரெய்லி கைகடிகாரம் வழங்கப்பட்டது எனவும் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.மு.அருணா, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார்.
இந்நிகழ்வுகளில், மாவட்ட வருவாய் அலுவலர் திரு.அ.கோ.ராஜராஜன் அவர்கள், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) திரு.எஸ்.திருமால், உதவி ஆணையர் (கலால்) திரு.திருமால், உதவி இயக்குநர் (தமிழ் வளர்ச்சி) திருமதி.ச.சீதாலெட்சுமி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திரு.கூ.சண்முகம் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் திருமதி.ப.புவனா மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.



