ஊட்டியில் ஆங்காங்கே வாகனங்களை இரண்டு நாட்களுக்கும் மேலாக ஒரே இடத்தில் நிறுத்தி வைப்பதால் போக்குவரத்திற்கு இடஞ்சல், சீர் நடவடிக்கை எடுக்குமா ஊட்டி நிர்வாகம்? நீலகிரி மாவட்ட செய்தியாளர் லிண்டா

ஊட்டியில் ஆங்காங்கே வாகனங்களை இரண்டு நாட்களுக்கும் மேலாக ஒரே இடத்தில் நிறுத்தி வைப்பதால் போக்குவரத்திற்கு இடஞ்சல், சீர் நடவடிக்கை எடுக்குமா ஊட்டி நிர்வாகம்? நீலகிரி மாவட்ட செய்தியாளர் லிண்டா

மிகவும் மோசமாக உள்ள ஊட்டி பகுதியில் டிராபிக் பிரச்சனை. இதனை கண்டு கொள்ளாத மாவட்ட நிர்வாகம். ஊட்டி பகுதியில் முக்கியமான சாலைகளில் உள்ளூர் பகுதியில் உள்ள வாகன ஓட்டிகளும் வெளியூரிலிருந்து வரும் சுற்றுலாப் பயணிகளின் வாகனமும் வெகு நேரமாக ஒரே இடத்தில் இரண்டு வரிசையாக அணிவகுத்து நிற்பதால் மிகவும் ஈடெஞ்சலாகவும் ஆபத்தாகவும் உள்ளது.

இரண்டு வரிசையாக பார்க்கிங் இல்லாத இடத்தில் பார்க்கிங் போடுகிறார்கள். இதனை டிராபிக் காவலர் கண்டு கொள்வதே இல்லை இதனோடு மாடு , ஆடு, எருமை கூட்டங்கள் செல்வதால் நடந்து செல்வோருக்கு மிகவும் ஆபத்தாக உள்ளது . ஒவ்வொரு இடங்களிலும் வெகு நேரமாக வாகனங்களில் செல்வோர் காத்திருக்கும் சூழ்நிலை உள்ளது.

இதனை போக்குவரத்து காவலர்கள் ஏன் கண்டு கொள்வது இல்லை அவர்கள் பாட்டுக்கு மொபைலை எடுத்து பார்த்துக் கொண்டு உள்ளனர். இதனை உடனடியாக சரி செய்ய வேண்டும் என்று சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் கேட்கின்றார்கள்.

நீலகிரி மாவட்ட செய்தியாளர் லிண்டா.