நெல் கொள்முதல் நிலையங்களில் முறைகேடு செய்தால் குற்றவியல் நடவடிக்கை விருதுநகர் மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை!!! பத்திரிகையாளர்: வீ.வீரராகவன்!!!

நெல் கொள்முதல் நிலையங்களில் முறைகேடு செய்தால் குற்றவியல் நடவடிக்கை விருதுநகர் மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை!!!  பத்திரிகையாளர்: வீ.வீரராகவன்!!!

நெல் கொள்முதல் நிலையங்களில் முறைகேடு செய்தால் குற்றவியல் நடவடிக்கை விருதுநகர் மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை

அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் முறைகேடு செய்யும் நபர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் எச்சரித்துள்ளார். 

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் கோட்ட அளவிலான விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. அப்போது, அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் முறைகேடுகள் நடப்பதாக விவசாயிகள் புகார் தெரிவித்தனர்.

அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் முறைகேடுகள் கண்டறியப்பட்டால் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் சுகபுத்ரா எச்சரித்துள்ளார்.

 கடந்த 17-ம் தேதி வரை 19,405 மெட்ரிக் டன் கொள்முதல் செய்யப்பட்டு 2,508 விவசாயிகளின் வங்கிக் கணக்கில் ரூ.39.48 கோடி வரவு வைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: விருதுநகர் மாவட்டத்தில் இதுவரை 34 இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு சன்னரக நெல் குவின்டால் ஒன்றுக்கு ரூ.2,545 மற்றும் பொதுரக நெல் குவின்டால்' ஒன்றுக்கு ரூ.2,500-க்கு கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. கடந்த 17-ம் தேதி வரை 19,405 மெட்ரிக் டன் கொள்முதல் செய்யப்பட்டு 2,508 விவசாயிகளின் வங்கிக் கணக்கில் ரூ.39.48 கோடி வரவு வைக்கப்பட்டுள்ளது.

நெற்பயிர் அறுவடை செய்யப்பட்டதை கள ஆய்வில் உறுதிசெய்த பின்னரே விவசாயிகளுக்கு முறையாக 10(1) சிட்டா மற்றும் அடங்கல்கள் கிராம நிர்வாக அலுவலர்களால் வழங்கப்பட வேண்டும். நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடமிருந்து மட்டுமே நெல் கொள்முதல் செய்யப்பட வேண்டும். வெளி மாவட்டங்களிலிருந்து விவசாயிகள் அல்லாத நபர்கள் போலி ஆவணங்கள் மூலம் நெல்லை விற்பனை செய்ய வந்தால், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

அந்த நபர்கள் மீதும், அவர்களுக்கு உடந்தையாக இருப்பவர்கள் மீதும் கொள்முதல் நிலைய பருவகால பணியாளர்கள் மீது அத்தியாவசியப் பொருட்கள் சட்டம், கள்ளச்சந்தை தடுப்பு மற்றும் அத்தியாவசிய பண்டங்களின் விநியோகம், பராமரிக்கும் சட்டம் 1955-ன் கீழ் கடுமையான குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

பத்திரிகையாளர்: வீ.வீரராகவன்