புதுக்கோட்டை மாவட்டம், குளத்தூர் வட்டம் குளவாய் பட்டியில் அமைந்துள்ள சுவேதா & SD INFRA கிரஷர் மற்றும் கல் குவாரியால் ஊரே சுடுகாடாக மாறும் அபாயம்.
அரசு எந்திரங்களுக்கு எச்சரிக்கை
புதுக்கோட்டை மாவட்டம், குளத்தூர் வட்டம் குளவாய் பட்டியில் அமைந்துள்ள சுவேதா & SD INFRA கிரஷர் மற்றும் கல் குவாரியால் ஊரே சுடுகாடாக மாறும் அபாயம்

உடனடியாக தடை விதிக்காவிட்டால் மக்களைத் திரட்டி போராட்டங்களை நடத்தி மூட வைப்போம்.
முறைகேடாக அனுமதி பெற்று எந்த அரசு விதிகளையும் கடைபிடிக்காமல் கனிமவள கொள்ளை நடைபெற்றுள்ளது.இதனால் அந்த பகுதி மக்களின் வாழ்வாதாரம் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது.
நிலத்தடி நீர்மட்ட அளவைவிட 6 மடங்கு அதிகமாக தோண்டப்பட்டுள்ளது. நிலத்தடி நீர்மட்ட அளவைவிட அதிகமாக 15 மடங்கு அதிகமான ஆழம் சென்றுள்ளது .அனுமதிக்கப்பட்ட மெட்ரிக் டன் அளவுகளை விட ஏழு மடங்கு அதிகமாக கனிமவள கொள்ளை நடைபெற்றுள்ளது.




