சம்பட்டிவிடுதி காவல் நிலையத்தில் டேட்டா என்ட்ரி ஆப்ரேட்டராக பணிபுரிந்து வரும் மதன்குமார் வீட்டில் திருட்டு, காவல் துறை விசாரணை.
புதுக்கோட்டை இரயில்வே நிலையம் பின்புறம் உள்ள செல்வம் நகரைச் சேர்ந்த பஜரங்கதல் கோட்ட பொறுப்பாளர் மோகன்ராஜ். இவரது சகோதரர் மதன்குமார் இவர் சம்பட்டிவிடுதி காவல் நிலையத்தில் டேட்டா என்ட்ரி ஆபரேட்டராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் இவர்கள் குடும்பத்தினரோடு அவரது உறவினர் வீட்டிற்கு சென்று விட்டு இன்று காலை வீடு திரும்பியுள்ளார். இந்நிலையில் அவரது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்துள்ளது. இதனைத் தொடர்ந்து வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது 10 சவரண் நகை திருடு போய் உள்ளதாக மோகன்ராஜ் கொடுத்த புகாரின் அடிப்படையில் திருக்கோகர்ணம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். பின்னர் அவரது வீட்டில் கைரேகை நிபுணர்களைக் கொண்டு கைரேகை சேகரிக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
பத்திரிகையாளர்: வீரராகவன்



