தனியார் கல்லூரிகளின் அரசு அங்கீகாரத்தை ரத்து செய்யுமா தமிழக அரசு? புதுக்கோட்டை மாவட்டம் பெருங்களூர் அருகே பூட்டுபோட்டு மூடி செயல்படாமல் இருக்கும் அன்னை அபிராமி பாலிடெக்னிக் கல்லூரி மற்றும் இச்சடியில் இயங்குவதாக விளம்பரப்படுத்தும் வருட கணக்கில் மூடப்பட்டுள்ள N M பாலிடெக்னிக் கல்லூரியின் அங்கீகாரம் ரத்தாகுமா?

  கல்லூரி என்ற போர்வையில் நிறுவனங்களை நிறுவிக்கொண்டு, டிரஸ்ட் மூலம் இடங்களை ஆக்கிரமித்துக் கொண்டு, எங்களது கல்லூரியில் பல ஆயிரம் மாணவர்கள் கல்வி பயின்று வருகிறார்கள் என்றும், நிறுவன கல்லூரியை திறக்கப்பட்ட ஒரு சில காலங்களிலே மூடி வைத்துவிட்டு, கல்லூரியில் மாணவ மாணவியர்கள் பயின்று வருவது போல் புகைப்படங்களை பதிவிட்டுக் கொண்டும், வருடா வருடம் மாணவர்கள் சேர்க்கை என்ற விளம்பர பதாகைகளை பரவலாக பரவிக் கொண்டும், அந்தச் சேர்க்கைக்கு மாணவர்களிடம் ஆயிரக்கணக்கில் தொகைகளைப் பெற்றுக் கொண்டும், அதன் பிறகு இழுத்து மூடிவிட்டு மாணவ மாணவியர்களின் வாழ்க்கைகளில் விளையாடும் கல்லூரிகளின் அரசு அங்கீகாரத்தை கண்டிப்பாக அரசு ரத்து செய்ய வேண்டும்!

அதோடு மட்டுமல்லாமல் மாணவ மாணவியர்களின் இருப்பிடம் அருகாமையிலே கல்லூரி செயல்படுவது போல் விளம்பரத்தை ஏற்படுத்தி தங்களது  கல்லூரியில் பயிற்சி கொடுக்காமல் மாற்றுக் கல்லூரியில் பயிற்சிக்கு அனுப்புவது கல்வியை ஏளனப்படுத்துவதாக குமரிகின்றனர் அப்பாவி பொதுமக்கள். 

ஆகையால் மாணவ மாணவியர்களின் வாழ்வாதாரத்தில் விளையாடும் தனியார் கல்லூரியின் அரசு உரிமைத்தை ரத்து செய்ய வேண்டும் தமிழக அரசு.