சீல் வைத்த பெட்டி மற்றும் கார் நம்பர் பிளேட் கிடக்கின்றது யார் இங்கே போட்டுள்ளனர் பெட்டிக்குள் என்ன இருக்கிறது என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருவதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் அருகே அழகம்பாள்புரம் ரோடு ஓரத்தில் உள்ள பள்ளத்தின் அடியில் சீல் வைத்த பெட்டி மற்றும் கார் நம்பர் பிளேட் கிடக்கின்றது யார் இங்கே போட்டுள்ளனர் பெட்டிக்குள் என்ன இருக்கிறது என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருவதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது அரசாங்கத்திலிருந்து சீல் வைத்தது போல் இருக்கும் பெட்டி கேட்பாரற்று சாலை ஓரத்தில் கிடப்பதால் போலீசார் இடையே பெரும் குழப்பத்தை ஏற்படுத்தி இருந்த நிலையில் அதை போலீசார் பிரித்துப் பார்த்தபொழுது அதில் நாளிதழ்களின் மூன்று பேப்பர் கட் இருந்தது தெரியவந்ததால் பரபரப்பு அடங்கியது

புதுக்கோட்டை ஆலங்குடி செல்லும் சாலையில் திருவரங்குளம் அருகே உள்ள அழகம்பாள்புரம் செல்லம் சாலை ஓரத்தில் உள்ள பள்ளத்தில் அரசாங்க முத்திரை வைப்பது போல் வைத்து பெட்டி சீல்யீட்டு சில்வர் பெட்டி சாலை ஓரத்தில் உள்ள பள்ளத்தில் கிடப்பதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் பெட்டியில் என்ன இருக்கிறது பணப்பெட்டியா ஏதேனும் வெடிபொருள் உள்ள வெட்டியா ஏதேனும் சடலம் உள்ளே இருக்கிறதா ஓட்டு இயந்திர பெட்டியா என பொதுமக்கள் பலரும் குழப்பத்தில் அதிர்ச்சியுடன் சாலை ஓரத்தில் உள்ள பள்ளத்தில் கிடைக்கும் பெட்டியை பார்த்து சென்று வருகின்றனர். 

தகவல் அறிந்து விரைந்து வந்த 

வல்லத்திராக்கோட்டை காவல்துறையினர் பொட்டியை கைப்பற்றி ஆட்டோவில் ஏற்றி சென்று சில்வர் பெட்டியில் என்ன இருக்கிறது என்பது குறித்து விசாரணை செய்து பெட்டிதிறக்கப்பட்டால் மட்டுமே பெட்டிக்குள் என்ன இருக்கிறது ஏதேனும் மர்ம பொருள் உள்ளதா பணம் எதுவும் உள்ளதா என்பது தெரிய வரும் என்பதால் அந்தப் பெட்டியை போலீசார் பத்திரமாக 

வல்லத்திராக்கோட்டை

காவல் நிலையத்திற்கு எடுத்துச் சென்று வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைத்து அந்த பெட்டியை சோதனை செய்து திறந்து பார்த்த பொழுது அந்தப் பெட்டியில் நாளிதழ்களின் மூன்று பேப்பர் கட்டு இருந்தது தெரிய வந்தது.

இதனால் சாலையோரத்தில் சீல் வைக்கப்பட்ட பெட்டியில் மர்ம பொருட்களோ பணமோ இல்லை என்பது தெரிய வந்ததால் அப்பகுதியில் பரபரப்பு அடங்கியது.