அதிகாரிகளுக்கு அறிவு உண்டா? என்ற கேள்விக்கு தள்ளப்பட்டுள்ளனர் கதுவாரிப்பட்டி கிராமக்கள் & போக்குவரத்து பயனாளர்கள் !
அதிகாரிகளுக்கு அறிவு உண்டா? என்ற கேள்விக்கு தள்ளப்பட்டுள்ளனர் கதுவாரிப்பட்டி கிராமக்கள் & போக்குவரத்து பொதுமக்கள் .

புதுக்கோட்டை மாவட்டம், புதுக்கோட்டை ஊராட்சி ஒன்றியம், வடவாளம் கிராம ஊராட்சி, முதல் நிலை ஊராட்சியாக இருந்ததை அதன் வளர்ச்சியை தடுத்து வெறும் ஊராட்சியாக மாற்றிய மக்கள் பிரதிநிதிகள் செயல்பட்ட கிராம பஞ்சாயத்து.

அது ஒரு புறம் இருக்க இச்சடி TO கதுவாரிப்பட்டி கிராமச் சாலை இந்த வருடம் ' ஆகஸ்ட்' மாதம் முதலில் (டெண்டர் ) ஒப்பந்தம் விடப்பட்டு ரூ.104.10 லட்சம் மதிப்பீட்டில் ஆரம்பமான நிலையில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை தமிழக சிறப்புச் செயலர் அவர்களும், புதுக்கோட்டை மாவட்ட ஊரக வளர்ச்சி திட்ட இயக்குநர் திருமதி. ஜெயசுதா ஆகிய இரு உயர்மட்ட அதிகாரிகள் ஆய்வும் செய்தனர்.
ஆனால் ஐந்து மாத காலமாகியும் அந்த கிராமச் சாலையை போட்டு முடிக்காமல், இருந்த சாலையையும் போக்குவரத்திற்கு இடையூராக நாசப்படுத்தியும், சாலையை போடாமல் தாமதமும் செய்து வருகின்றனர் புதுக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள்.


அடா! மக்கள் பிரதிநிதிகள் தான் ஆணவத்தில் ஆடுனார்கள் என்றால், தற்போது அரசு அலுவலர்களும் தலைக்கணத்தில் ஆடுகிறார்கள், குறிப்பாக வட்டார வளர்ச்சி அலுவலர்கள்.
நிதம் நிதம் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ மாணவியர்கள் சாலையில் போடப்பட்டுள்ள கற்கலால் சருக்கி விழுந்தும் வருகின்றனர், கூலி வேலைக்கு செல்லும் பெண்கள் மற்றும் முதியோர்களின் நிலைமை அதை விட கேவலமாக உள்ளது.

ஒப்பந்த காலம் முடிவடைய இன்னும் இடையே ஒரு மாத காலம் உள்ளது அதற்குள் சாலையை போட்டு, அதன் பிறகு ஆய்வு செய்து, சாலையின் தரத்தை நிர்ணயம் செய்து, அதன் பிறகே இறுதி (பண்ட்) நிலுவைத் தொகையை ஒப்பந்த தாரரிடம் ஒப்படைப்பார்கள் அரசு அலுவலர்கள்.
இல்லை கடைசி நாட்களில் நாடகங்களில் நடிக்கும் கோமாளிகளைப்போல் நடித்து % அடிப்படையில் கமிஷன் பெற்றுக்கொண்டு, சாலைகளை தரம் பார்க்காமல் (பண்ட்) ஒப்படைத்து விடுவார்களா என்றும் தெரியவில்லை.

எது எப்படியோ, சாலையின் பணியில் சிரிதளவு விரிசல் ஏற்பட்டாலும், புதுக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பணியாற்றம் அரசு அலுவலர்கள் மற்றும் வடவாளம் கிராம பஞ்சாயத்தில் பணியாற்றம் அரசு பணியாளர்களின் அரசு வேலைக்கும், தங்களுக்கும் இடையே விரிசல் ஏற்படாமல் பார்த்துக் கொள்வது நல்லது.
பத்திரிகையாளர் வீ.வீரராகவன்



