அம்பத்தூரில் காவல் பெண் உதவி ஆய்வாளர் தற்கொலை

அம்பத்தூரில் காவல் பெண் உதவி ஆய்வாளர் தற்கொலை

அம்பத்தூரில் காவல் பெண் உதவி ஆய்வாளர் தற்கொலை

சென்னை அம்பத்தூர் காவல்நிலையத்தில் சட்டம் ஒழுங்கு பிரிவு உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வந்தவர் அந்தோணி மாதா (30)கடந்த 2015-ம் ஆண்டு யோவான் என்பவருடன் திருமணமாகி 2 மகன்கள் உள்ளனர்.

கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து வந்த அந்தோணி மாதா, மீஞ்சூர் காவல் நிலையத்தை சேர்ந்த உதவி ஆய்வாளர் ரஞ்சித்குமார் என்பவருடன் பழகி வந்துள்ளார். இந்நிலையில் நேற்றிரவு ரஞ்சித்துகுமாரை வீட்டிற்கு வருமாறு அந்தோணி மாதா அழைத்ததாகவும், அதற்கு ரஞ்சித் மறுத்துவிட்டதாகவும் தெரிகிறது.

இதனால் ஆத்திரமடைந்த அந்தோணிமாதா ரஞ்சித் குமாருக்கு வீடியோ கால் செய்து தூக்கிக்கிட்டு தற்கொலை செய்துகொள்ளப்போவதாக மிரட்டி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் இது குறித்து அம்பத்தூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்