2026 - சட்டசபை தேர்தலின் போது திமுகவின் கூடாரத்தை காலி செய்த மத்திய மந்திரி ஆ.ராஜா, ஸ்டாலின் குடிமி ஆ.ராஜாவின் கையிலா? ஆட்டம் கண்டு போய் இருக்கும் மு.க.ஸ்டாலின்! 2026 - தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவு திமுக கூட்டணிக்கு சாதகமா? பாதகமா?
2ஜி வழக்கில் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்த போது, தன்னை சந்திக்க திமுக எம்.பி அல்லது எம்.எல்.ஏ அல்லது கட்சிக்காரர்கள் யாராவது வந்தார்களா? தலைவர் என்ன துரைமுருகனை அனுப்பி எனக்கு ஆறுதல் சொன்னாரா? நான் கைதாகி இரண்டு மாதங்கள் கழித்து கனிமொழி கைது செய்யப்படுகிறார். அதன்பிறகு தான் அமைச்சர்கள் முதல் மூத்த தலைவர்கள் வரை ஒவ்வொருவராக டெல்லிக்கு படையெடுத்து வருகிறார்கள். அதுவரை யாருமே வரவில்லை. இந்த 2 மாதம் என் மனநிலை எப்படி இருந்திருக்கும்?
அந்த சமயத்தில் நான் Burst ஆகியிருந்தால் என்னவாகியிருக்கும்? கலைஞர் டிவிக்கு பணம் சென்றது. என் வீட்டில் ஏதாவது ஒன்றை சிபிஐ எடுத்தார்களா? ஒருநாள் அழகிரி நேரில் வந்து சிறையில் என்னை சந்திக்கிறார். கலைஞர் டிவிக்கு வாங்கி கொடுத்தது எல்லாம் ஸ்டாலின் தானாம். நீயும், கனிமொழியும் ஏன் சிறையில் இருக்கிறீர்கள். ஸ்டாலின்தான் எல்லாம் செய்தார் எனக் கூறி அப்ரூவராகி விட்டு வெளியே வர வேண்டியது தானே?
கலைஞருக்கு பிறகு கட்சிக்கு அவரிடம் போகும். ஆனால் என்னை விட்டு போகாது. ஆறு மாதமோ, ஒரு வருடமோ அதன்பிறகு காட்சிகள் மாறும். குறிப்பாக தான் வெளியே வந்துவிட்டால் ஹீரோ என்கிறார். புத்தகம் ஒன்று வெளியே வரப் போகிறது. தமிழ், ஆங்கிலம் என இரண்டு மொழிகளிலும் வெளியிடப்படும். இந்து என்.ராம் படித்து விட்டு மலைத்து போய்விட்டார். என்ன சார், இந்த வெளு வெளுத்துவிட்டீர்கள் என என்னிடமே கேட்கிறார். அதில் பிரணாப் முகர்ஜி, சோனியா காந்தி, மன்மோகன் சிங், ப.சிதம்பரம் என அனைவரையும் பிச்சு எடுத்திருக்கிறேன்.
அந்த புத்தகம் வெளியே வந்ததும் ஒரு ஸ்டாராக மாறும். அது வெளிவரும் வரை அடக்கி வாசிப்பேன். அதன்பிறகு எனக்கென்று ஒரு தனி அடையாளத்தை உருவாக்கி கொள்வேன். என்னை யாரும் எஸ்.சியாக பார்ப்பதில்லை. இடைநிலை சாதியினர் யாராக இருந்தாலும் எனக்கு மரியாதை அளிக்கின்றனர். போதுமான பணம் இருக்கிறது. மூளை இருக்கிறது. ஸ்டாலினுக்கு பெரிய Brain இருக்கா?!அப்புறம் என்ன வேண்டும்? கலைஞர் போய்விட்டால் ஸ்டாலின் – கனிமொழி பஞ்சாயத்து வரும்.
எங்க டெல்லிக்கு போய் ஆங்கிலத்தில் பேசிவிடுவாரா ஸ்டாலின் எனக் கேட்கிறார். இதில் கவனிக்க வேண்டிய மற்றொரு விஷயம் என்பது தங்கையை ஸ்டாலின் ஒருபோதும் நம்ப மாட்டார். அப்படியெனில் என்னை வெளியே தள்ள முடியாது. தன்னை எம்.ஜி.ஆர் என நினைத்து கொண்டிருக்கிறார். தலைவர் கலைஞருக்கு பின்னர் தான் இவருக்கு setback வரும். தற்போதைய சூழலில் தலைவரே கைதி மாதிரி இருக்கிறார். ஸ்டாலின் Takeover பண்ணிட்டார். ஸ்டாலின்கிட்ட கட்சி போனாலும் என் பிடி விட்டுப் போகாது. என்னை கட்சியை விட்டு எடுக்க முடியாது; அதுக்கு வேற லாக் வச்சிருக்கேன்.
~ ஆ.இராசா குரல் பதிவான ஆடியோவில் இருந்து...



