வடவாளம் ராயப்பட்டி கிராமத்தில் கள்ளச்சந்தையில் 24-மணி நேரமும் மது மற்றும் போலி மது விற்பனை! கலால்துறை மற்றும் காவல் துறை உடந்தையா? இச்சடி மற்றும் சம்பட்டிவிடுதியிலும் அதே நிலமை! இந்த நிலைமையால் பல உயிர் நாசம்! பல பெண்களின் வாழ்க்கை கணவர் இல்லாமல் கேள்விகுறியாகி விட்டது!

  புதுக்கோட்டை மாவட்டம், வடவாளம் பஞ்சாயத்து, தெற்கு ராயப்பட்டி கிராமம், அதன் அருகே ஒட்டி காயாம்பட்டி கிராமம், மாங்கனாம்பட்டி, மாஞ்சன்விடுதி, வம்பன், வேப்பங்குடி, கள்ளுபள்ளம், மேலத்தோப்பு, செட்டியாப்பட்டி, கணேசபுரம் என கிராமங்களை சேர்ந்த சுமார் 1000க்கும் மேற்ப்பட்ட குடும்பங்கள் உள்ளன.

    இந்த சூழலில் திமுக ஆட்சியில் அமைய பெற்றதுதான் இந்த மதுபானக்கடை, இந்த கடை இதற்கு முன்பு கந்தர்வக்கோட்டை அருகே இயங்கி வந்ததாகவும் அங்கு பல உயிர்களை பலி வாங்கி விட்டு, அங்கு அப்புறவு செய்த பின்னர் இங்கு உயிர் பலி வாங்க வந்துள்ளது இந்த மதுக்கடை.

  அதன் காரணமாக சில மாதங்களுக்கு முன்பு கீழக்காயம்பட்டி கிராமத்தில் மூன்று இளம் பிஞ்சு குழந்தைகளை அநாதையாக விட்டு விட்டு  கணவன் மனைவி இருவருக்குள்ளும் பிரச்சனை ஏற்ப்பட்டு மனைவியை வெட்டி கொன்று விட்டு தானும் தூக்கு போட்டு இறந்த சம்பவம் நடை பெற்றது.

  மற்றொன்று அந்த மதுக்கடையில் சில மாதங்களுக்கு முன்பு ஏற்பட்ட தகராறு காரணமாக திருவரங்குளம் அருகே உள்ள அழகம்மாள்புரம் கிராமத்தில் ஒரு இளைஞரை வெட்டி கொலை செய்யபட்டதும் இந்த மதுக்கடையால் தான்.

   அதன் விளைவாக நேற்று 03/04/2026 அன்று காலை ராயப்பட்டி மற்றும் காயாம்பட்டி கிராமப் பெண்கள் மதுக்கடையை முற்றுகையிட்டு, மதுபாட்டில்களை பறிமுதல் செய்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

  விபரம் காவல் துறைக்கு தெரியவர சம்பவ இடத்தில் திருதிருவென நேற்று முழித்ததாக தகவல், கள்ளச்சந்தையில் மது விற்பனைக்கு காரணமே அவர்கள் தான் என்று பெண்கள் ஒரு சாயலில் பேச ஆரம்பித்து விட்டனர்.

  புதுக்கோட்டை மதுபானக்கடை மேலாளர் அவர்கள் இந்த கடையின் உரிமத்தை ரத்து செய்து, மதுபானக்கடை மேலாளர் வீட்டின் அருகே இயங்க ஏற்பாடு செய்து கொள்வார்களா?

   publicsocialmedia.in