லெம்பலக்குடி அரசு மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் பள்ளி அளவில் முதல் மூன்றிடம் பிடித்த மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கிப் பாராட்டிய ஊராட்சி மன்றத்தலைவர் மற்றும் பள்ளி ஆசிரியர்கள்
லெம்பலக்குடி அரசு மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் பள்ளி அளவில் முதல் மூன்றிடம் பிடித்த மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கிப் பாராட்டிய ஊராட்சி மன்றத்தலைவர் மற்றும் பள்ளி ஆசிரியர்கள்

புதுக்கோட்டை,ஆக.15:80 ஆவது சுதந்திர தினவிழாவையொட்டி புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள லெம்பலக்குடி அரசு மேல் நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் பள்ளி அளவில் முதல் மூன்றிடங்களை பிடித்த மாணவர்களுக்கு ஊராட்சி மன்றத் தலைவர் மற்றும் பள்ளி ஆசிரியர்களின் ஏற்பாட்டின் பேரில் பாராட்டு விழா பள்ளித்தலைமை ஆசிரியர் பாரதியார் தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது.
விழாவில் பத்தாம் வகுப்பில் முதலிடம் பிடித்த ரோஹித்பிரபா,இரண்டாம் இடம் பிடித்த துவாராகா,மூன்றாம் இடம் பிடித்த விக்னேஸ்வர் ஆகியோருக்கும், பன்னிரண்டாம் வகுப்பில் முதலிடம் பிடித்த நவசக்தி,இரண்டாமிடம் பிடித்த லுக்சிக்கா,மூன்றாமிடம் பிடித்த ரம்யா ஆகியோருக்கும் ஊராட்சி மன்ற தலைவர் பாலு,பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் பொன்மலையப்பன் ஆகியோர் கேடயம் மற்றும் பரிசுகளை வழங்கிப்பாராட்டினார்கள்.
அதே போல் மாவட்ட அளவில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டிகள்,பள்ளி அளவில் நடைபெற்ற காமராஜர் பிறந்த நாள் விழா,சுதந்திர தின விழாவையொட்டி நடைபெற்ற கட்டுரைப்போட்டி,பேச்சுப்போட்டி,ஓவியப்போட்டி,கவிதைப் போட்டியில் சிறப்பிடம் பிடித்த மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கிப் பாராட்டினர்கள்.
விழாவிற்கான ஏற்பாடுகளை உதவி தலைமை ஆசிரியர்கள் அண்ணாதுரை, சுபத்ரா மற்றும் முதுகலை ஆசிரியர்கள் ஸ்டெல்லாமேரி,வினோதா,,சாந்தி,காயத்ரி,நவநீத கிருஷ்ணன்,இந்திரா காந்தி,ஹேமலதா மற்றும் பள்ளி ஆசிரியர்கள் செய்திருந்தனர்.
நிகழ்ச்சிகளை தமிழ் ஆசிரியர் ரவீந்திரன் தொகுத்து வழங்கினார்.
விழாவின் முடிவில் ஆசிரியர் மருதப்பன் நன்றி கூறினார்..
மாணவர்களுக்கான கேடயம் ,சான்றிதழ்கள் மற்றும் பரிசுத்தொகை ரூ3000,ரூ 2500, ரூ 2000 த்தை ஊராட்சி மன்றத்தலைவர் பாலு மற்றும் பள்ளி ஆசிரியர்களே வழங்கினர் என்பது குறிப்பிடத்தக்கது.



