மயில்களை விஷம் வைத்துக் கொன்ற குற்றவாளியை பிடித்து கைது செய்த புதுக்கோட்டை வனத்துறையினர்
ஆலங்குடி தாலுக்கா கொத்தமங்கலம் வடக்கு ஊராட்சி பனசக்காடு கிராமத்தில் தேசிய பறவையான மயில்கள் 3 Nos. (ஆண் 1 + பெண் 2) விஷம் கலந்த நெல்மணிகளை உட்கொண்டு இறந்த நிலையில் மீட்கப்பட்டது குற்றவாளியினை கைது செய்து நீதிமன்றத்தில் முன்பு ஆஜர் படுத்தினர்.

புதுக்கோட்டை வனச்சரகம், ஆலங்குடி பிரிவுக்கு உட்பட்ட கொத்தமங்கலம் வடக்கு ஊராட்சி பனசக்காடு கிராமம் அருகே மயில்கள் இறந்து கிடந்ததாக நேற்று (08.11.2025) மாலை கிடைத்த ரகசிய தகவலின் படி மாவட்ட வன அலுவலர் திரு சோ. கணேசலிங்கம் அவர்களின் உத்தரவின் படி புதுக்கோட்டை வனச்சரக அலுவலர் M. சதாசிவம், வனவர்கள் P. முருகானந்தம் மற்றும் பா. சிவரஞ்சனி ஆகியோர் அடங்கிய குழுவினர் பனசக்காடு கிராமத்தில் தணிக்கை மேற்கொண்ட போது செல்வி க/பெ தமிழ்செல்வன் என்பவருக்கு சொந்தமான வயல் பகுதிக்கு அருகில் உள்ள தென்னந் தோப்பில் 3மயில்கள் (ஆண் மயில் 1 + பெண் மயில் 2) இறந்து கிடந்தது கண்டறியப்பட்டு மீட்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

செல்வி க/பெ தமிழ்செல்வன் என்பவருக்கு சொந்தமான நிலத்தில் விதைக்கப்பட்டுள்ள நெல்மணிகளை அதிக எண்ணிக்கையிலான எலிகள் பெரிதும் சேதப்படுத்துவதால் அவற்றை அழிக்கும் நோக்கில் Zinc Phosphide பூச்சி மருந்து கலந்த நெல்மணிகளை ஆங்காங்கே தூவி இருந்ததை அவ்வழியாக உணவு தேடி வந்த மயில்கள் சாப்பிட்டு இறந்துவிட்டன என விசாரணையில் தெரியவந்தை தொடர்ந்து எதிரி செல்வி க/பெ தமிழ்செல்வன் கைது செய்தும், எதிரியின் வயலில் தூவி இருந்த நெல்மணிகளை சேகரம் செய்தும், இறந்த நிலையில் மீட்கப்பட்ட 3 மயில்களை கொத்தமங்கலம் கிராம நிர்வாக அலுவலர் முன்னிலையில் கைப்பற்றி வன உயிரின (பாதுகாப்பு) சட்டம் 1972-ன் கீழ் வன உயிரின குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டு எதிரியினை இன்று (09.11.2025) பிற்பகல் மணமேல்குடி குற்றவியல் நீதிமன்றத்தின் முன் ஆஜர் செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இறந்த மயில்களின் உடல்களை கொத்தமங்கலம் உதவி கால்நடை மருத்துவர் டாக்டர் அசோகன் அவர்களால் பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு அதன் பாகங்கள் சேகரிக்கப்பட்டு திருச்சி தடய அறிவியல் துறைக்கு விஷம் தன்மையினை உறுதி செய்யும் பொருட்டு அனுப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மாவட்ட வன அலுவலர் திரு சோ. கணேசலிங்கம் அவர்கள் வன உயிரினங்களை வேட்டையாடுதல் மற்றும் விஷம் கலந்த உணவினை மற்ற உயிரினங்களுக்காக வைப்பதினால் வன உயிரினங்கள் பாதிக்கபட்டால் சம்மந்தப்பட்டவர்களின் மீது வன உயிரின (பாதுகாப்பு) சட்டம் 1972-ன் கீழ் சட்டப்படியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனத் தெரிவித்தார்.
பத்திரிகையாளர்:- வீ. வீரராகவன்



