புதுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் இரண்டாவது முறையாக திராவிட முன்னேற்றக் கழகத்தின்,வேட்பாளர் டாக்டர். வை. முத்துராஜா MBBS MLA.

  மாண்புமிகு கழகத் தலைவர், தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவுறுத்தலின்படி, மாண்புமிகு கழக இளந்தலைவர், தமிழ்நாடு துணை முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலோடு,

  முத்தமிழ் அறிஞர் தலைவர் கலைஞர் அவர்களின் ஆசியோடும்,

  புதுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் இரண்டாவது முறையாக திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பாக போட்டியிடுவதற்காக, எனது வேட்பு மனுவை கழகத் தோழர்களுடனும், கூட்டணி கட்சிகளின் ஆதரவுடனும், பொதுமக்களின் பேராதரவுடனும் தாக்கல் செய்தார் புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதியின் வெற்றி வேட்பாளர் உயர்திரு டாக்டர். வை. முத்துராஜா MBBS MLA அவர்கள்.

  இந்நிகழ்வின் போது, மாநகரக் கழகச் செயலாளர்கள், ஒன்றியக் கழகச் செயலாளர்கள், மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சி நிர்வாகிகள், கழக முன்னோடிகள், மாநில, மாவட்ட, மாநகர, ஒன்றிய, பேரூர் மற்றும் வட்டக் கழக நிர்வாகிகள், கழக உடன்பிறப்புகள் பலரும் கலந்து கொண்டனர்.