கோமாளிக்கு தெரியுமா நாட்டின் நிர்வாகத் திறன், விஜய் கோமாளியாக நடிக்க ஜனநாயகன் படத்திற்கு 220 கோடியாம் சம்பளமாம், கோமாளித்தனமாக கரூரில் கூட்டத்தை கூட்டி 40க்கும் மேற்பட்ட உயிர்களை பறித்த விஜய்க்கு என்ன ஆளுமை திறன் தெரியும் என்று டீக்கடை பெஞ்சுகளில் விவசாயிகள் விலாசல்!!!
விஜய்க்கு இவ்வளவு சம்பளமா?
ரூ.380 கோடி பொருட்செலவில் உருவாகியுள்ள 'ஜனநாயகன்' படத்திற்கு, விஜய் ரூ.220 கோடி சம்பளம் பெற்றுள்ளதாக தகவல்
இயக்குநர் ஹெச்.வினோத்துக்கு ரூ.25 கோடியும், இசையமைப்பாளர் அனிருத்துக்கு ரூ.13 கோடியும், பாபி தியோல் மற்றும் பூஜா ஹெக்டே ஆகியோருக்கு தலா ரூ.3 கோடியும் சம்பளம் என தகவல்.
-> -> ->(அட கடவுளே... கரூரில் பலியான 41 பேரின் பிரேத பரிசோதனையில் அதிர்ச்சி: உயிரிழந்தோரின் கடைசி 3 நிமிடங்கள் கொடுமை <- <- <- .
கரூரில் 41 பேர் பலியான கூட்ட நெரிசல் விவகாரத்தில் பிரேத பரிசோதனை அறிக்கையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளனா். அவை அதிர்ச்சி மேல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தமிழக அரசியலையே உலுக்கிய கரூர் பேரதிர்ச்சியில் உயிரிழந்தவர்களின் பிரேத பரிசோதனை அறிக்கையில் அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த 27 அன்று கரூர் வேலுச்சாமிபுரத்தில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் நடத்திய மூன்றாவது வார தேர்தல் பிரச்சார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர். இதில் 10 குழந்தைகள், 20 பெண்கள் உட்பட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த பொதுமக்கள் அடங்குவர்.
கரூர் பலி எண்ணிக்கை 41 மூச்சுத்திணறலே முக்கிய காரணம்.
மருத்துவர்களின் அறிக்கையின்படி, உயிரிழந்தவர்களில் 25 பேர் கடைசி 2–3 நிமிடங்கள் மூச்சு விட முடியாமல் தவித்து மரணம் அடைந்துள்ளனர். மிகுந்த நெரிசலால் சுவாசப் பாதை அடைந்து, ஆக்ஸிஜன் குறைவால் அவர்கள் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும், 10-க்கும் மேற்பட்டோருக்கு விலா எலும்புகள் முறிந்து, நுரையீரல் மற்றும் உள் உறுப்புகள் கிழிந்து சேதமடைந்துள்ளன. இதுவே அவர்கள் உடல் செயல்பாடுகளை பாதித்து, மருத்துவ உதவி கிடைக்குமுன்பே உயிரிழப்புக்குக் காரணமாகியுள்ளது. இந்த விபத்தில் உயிரிழந்த 10 குழந்தைகளின் உடலில் நுரையீரல், கழுத்து, இடுப்பு, முதுகு உள்ளிட்ட பகுதிகள் கடுமையாக சேதமடைந்துள்ளன. பல குழந்தைகளின் கழுத்து எலும்பு கூட முறிந்து காணப்பட்டதாக மருத்துவர்கள் குறிப்பிட்டுள்ளனர். பெண்களில் பெரும்பாலானோர் கீழே விழுந்தபோது கூட்ட நெரிசலில் நசுங்கி மூச்சுத்திணறலால் உயிரிழந்துள்ளனர்.



