புதுக்கோட்டையில் வேருடன் சாய்ந்த ஆலமரம், பொதுமக்கள் வேதனை!
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி தாலுகா, வாண்டாகோட்டை வருவாய் கிராமத்தைச் சார்ந்த திருவுடையார்பட்டி கிராமத்தில் பழங்காலத்து ஆலமரம் தற்போது அடித்த டிட்வா புயல் சூறாவளி காற்றினால் வேருடன் சாய்ந்தது.

காசிக்கும் வீசம் கூட என்று உலகப்புகழ் பெயர் பெற்ற திருவுடையார்பட்டி ஸ்ரீ திருமூலநாதர் மற்றும் திரிபுரசுந்தரி திருக்கோவிலில் எதிரே பல வருடங்களாக பொதுமக்களுக்கு நிழல் தந்த இரண்டு ஆலமரம் டிட்வா புயலால் ஏற்பட்ட சூறாவளி காற்றினால் வேருடன் சாய்ந்தது.

திருவுடையார்பட்டி திருமூலநாதர் திருபுரசுந்தரி திருக்கோவிலில் புதுக்கோட்டை மாவட்டத்தை சார்ந்த மக்கள் பலர் ஈமக் கிரியை இறுதிச் சடங்கு இங்குதான் செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இரண்டு ஆல மரங்கள் சாய்ந்ததை ஆலங்குடி தாலுகா வாண்டாக்கோட்டை கிராம நிர்வாக அலுவலர் அவர்கள் கணக்கெடுப்பு எடுத்துக்கொண்டு சென்றுள்ளார்.



