திருச்சி ரயிலில் ரூ 5 லட்சம் மதிப்புள்ள கஞ்சா பறிமுதல்.திருச்சி இருப்புப் பாதை காவல் நிலைய அதிகாரிகளின் அதிரடி சோதனையில் சிக்கியது.
திருச்சி ரயிலில் ரூ 5 லட்சம் மதிப்புள்ள கஞ்சா பறிமுதல்.திருச்சி இருப்புப் பாதை காவல் நிலைய அதிகாரிகளின் அதிரடி சோதனையில் சிக்கியது
திருச்சி இருப்புப் பாதை காவல் கண்காணிப்பாளர் ஆதர்ஷ் பச்சேரா அவர்கள் உத்தரவின் பேரில் காவல் துணை கண்காணிப்பாளர் சக்கரவர்த்தி அவர்களின் மேற்பார்வையில் காவல் ஆய்வாளர் தூய மணி வெள்ளைச்சாமி தலைமையில் வருகின்ற சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு குற்றத் தடுப்பு சம்பந்தமாக திருச்சி இருப்புப் பாதை காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் சுகுமாரன் தலைமை காவலர் ஆனந்த் காவலர்கள் கண்ணதாசன், ராஜ்குமார் மற்றும் திருச்சி போதைப்பொருள் நுண்ணறிவு பிரிவு காவலர்கள் ஆகியோர் இன்று சனிக்கிழமை 04.04.2026 ஆம் தேதி மாலை 4:30 மணி அளவில் திருச்சி ரயில் நிலைய நடைமேடை எண் 5 ல் வண்டி எண். 20849 புவனேஸ்வரில் இருந்து ராமேஸ்வரம் வரை செல்லும் விரைவு வண்டியில் பின்னால் உள்ள பொதுப் பெட்டியில் கேட்பாரற்று கிடந்த ட்ராலி சூட்கேசில் சோதனை செய்த போது தலா 2 கிலோ கொண்ட 5 பாக்கெட்டுகள் மொத்தம் 10 கிலோ, (மதிப்பு சுமார் 5 லட்சம்) அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சா போதைப்பொருள் இருப்பது கண்டறியப்பட்டு அது முறையாக மீட்கப்பட்டு தேவையான சட்ட நடவடிக்கைக்காக போதைப்பொருள் நுண்ணறிவு பிரிவு திருச்சி அவர்களிடம் திருச்சி இருப்புப் பாதை காவல் நிலைய அதிகாரிகள் முன்னிலையில் ஒப்படைக்கப்பட்டது.



