தமிழகம் முழுவதும் அதிகாரிகள் பணியிட மாற்றங்கள் நடைபெற்றன வாக்காளர்கள் அச்சமின்றி பாதுகாப்புடன் வாக்களிக்க நாங்கள் தயாராக உள்ளோம் என்பதை போலீசார் நினைவுபடுத்தும் வகையில், மத்திய பாதுகாப்பு படை மற்றும் போலீசார் உள்ளிட்டோர்
2026 சட்டமன்றத் தேர்தல் விரைவில் அறிவிக்கப்பட்டு நடைபெற உள்ள நிலையில் தமிழகம் முழுவதும் அதிகாரிகள் பணியிட மாற்றங்கள் நடைபெற்றன.

வாக்காளர்கள் அச்சமின்றி பாதுகாப்புடன் வாக்களிக்க நாங்கள் தயாராக உள்ளோம் என்பதை போலீசார் நினைவுபடுத்தும் வகையில் புதுக்கோட்டையில் புதிய பேருந்து நிலையத்திலிருந்து காவல் சூப்பிரெண்ட் அபிஷேக் குப்தா தலைமையில் மாநகர காவல் துணை சூப்பிரண்ட் பிருந்தா, மாநகர காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சுகுமாரன் உள்ளிட்ட போலீசார் மற்றும் மத்திய பாதுகாப்பு படை போலீசார் உள்ளிட்டோர் அணிவகுத்து சென்றனர். அணிவகுப்பு முன்பாக போலீசாரின் பேண்ட் வாத்திய முழக்கங்கள் எழுப்பப்பட்டது.

அணிவகுப்பு பேரணி புதிய பேருந்து நிலையத்திலிருந்து புறப்பட்டு முக்கிய வீதிகள் வழியாக சென்று பின்னர் புதிய பேருந்து நிலையத்தை அடைந்தது.



