தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் பகுதியை சேர்ந்த, பன்னிரண்டு வயது பள்ளி சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ள செய்தியும், இந்த விடியா திமுக ஆட்சியில் செய்தியாகவே செல்கிறது என்பது தான் அதீத மன வேதனையை அளிக்கிறது.

நாள் ஒரு மேனி, பொழுதொரு வண்ணமுமாய் , நேற்று முன்தினம், செங்கல்பட்டு பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமி பாலியல் வன் கொடுமைக்கு ஆளானார்.
ஒவ்வொரு முறையும் நமது எதிர்கட்சி தலைவர் அண்ணன் Edappadi K. Palaniswami அவர்கள் சட்டமன்றத்தில் பதிவு செய்தார், தவறுகள் அனைத்து ஆட்சியிலும் நடக்கும் மறுப்பதற்கில்லை. ஆனால், மேற்கொண்டு அதே தவறு மீண்டும் நடக்காமல் இருக்க நாம் என்ன செய்தோம், என்ன நடவடிக்கை எடுத்தோம் என்பது தான் முக்கியம் என்று உரையாற்றினார்.
ஆனால் இந்த விடியா திமுக அரசு, தவறான குற்றச்சாட்டை வைப்பதாக எடப்பாடியார் மீது பழி சுமத்தினார்கள்.
பெண்கள் பாதுகாப்பை குழி தோண்டி புதைத்துவிட்டு, பெண்களை இழிவாக பேசிவிட்டு, ஆயிரம் கொடுக்கிறேன் என்று கூறி வாக்களிக்க கூறுகிறார்கள் திரு ஸ்டாலின் மற்றும் திரு உதயநிதி ஆகியோர். விரைவில் பெண்கள் தங்களது கோபத்தினை வாக்குகள் மூலம் காண்பிப்பார்கள்.
மீண்டும் கழக ஆட்சி அமைந்ததும், பெண்கள் பாதுகாப்பில் எந்த சமரசமும் இன்றி, அனைத்து நடவடிக்கைகளையும் எப்படி கடந்த காலங்களில் இதய தெய்வம், புரட்சி தலைவி அம்மா அவர்களும் அண்ணன் எடப்பாடியார் அவர்களும் எடுத்தார்களோ, அது மீண்டும் தொடரும் என்பதில் எந்த சந்தேகமும் வேண்டாம்.