புதுக்கோட்டை ஆலங்குடி சாலையில் கொலை உள்ளிட்ட பத்து வழக்குகளில் தொடர்புடைய காந்தி நகரைச் சேர்ந்த சரித்திர பதிவேடு குற்றவாளி எட்டு பேர் கொண்ட கும்பலால் கொடூரமாக வெட்டி படுகொலை, புதுக்கோட்டை மாவட்டத்தில் சந்தி சிரிக்கிறது புதுக்கோட்டை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஐயா அவர்களே!
புதுக்கோட்டை அசோக் நகர் பேருந்து நிறுத்தத்தில் புதுக்கோட்டை ஆலங்குடி சாலையில் கொலை உள்ளிட்ட பத்து வழக்குகளில் தொடர்புடைய காந்தி நகரைச் சேர்ந்த சரித்திர பதிவேடு குற்றவாளி எட்டு பேர் கொண்ட கும்பலால் கொடூரமாக வெட்டி படுகொலை, கடந்த 2025 ஜூன் மாதம் நடந்த இளைஞர் படுகொலை வழக்கில் தற்போது கொலை செய்யப்பட்டவர் இரண்டாவது குற்றவாளியாக உள்ள நிலையில் அந்த சம்பவத்திற்கு பழி தீர்க்கும் வகையில் இந்த கொலை சம்பவம் நடந்ததா என கணேஷ் நகர் போலீசார் விசாரணை*

புதுக்கோட்டை மாநகராட்சிக்கு உட்பட்ட காந்திநகர் 1வது குறுக்குத் தெருவை சேர்ந்த காமராஜ் என்பவரது மகன் சுமன் (எ) ஜெய சுமன் (31). இவர் இன்று பிற்பகலில் காந்திநகர் நான்காம் வீதியைச் சேர்ந்த அவரது நண்பரான ராஜ்கபூருடன் புதுக்கோட்டை ஆலங்குடி சாலையில் உள்ள அசோக் நகர் பேருந்து நிறுத்தம் அருகே உள்ள எஃப்எல்டு மதுபான கடைக்கு மது அருந்த இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.
அப்போது ஆலங்குடி பேருந்து நிறுத்தம் அருகே புதுக்கோட்டை ஆலங்குடி சாலையில் சுமன் சென்ற இருசக்கர வாகனத்தை எட்டு பேர் கொண்ட கும்பல் வழிமறித்த போது சுமனுடன் வந்த ராஜ்கபூர் அங்கிருந்து ஓட சுமனை அவர்கள் வைத்திருந்த ஆயுதங்களைக் கொண்டு கொடூரமாக தலை கால் உள்ளிட்ட பகுதிகளில் வெட்டி கொலை செய்தனர். இதில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே சுமன் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்த நிலையில் கொலை செய்த எட்டு நபர்களும் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.
பின்னர் இந்த தகவல் அறிந்து கொலை செய்யப்பட்ட சுமனின் மனைவி, தாயார் உறவினர்கள் மற்றும் அவரது நண்பர்கள் கொலை செய்யப்பட்ட இடத்தில் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் கொலை செய்யப்பட்ட சுமனின் உடலை பார்த்து அவரது மனைவி தாயார் நண்பர்கள் கதறி அழுதனர்.
பின்னர் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் உடனடியாக கொலை செய்யப்பட்ட சுமனின் உடலை மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்து இந்த சம்பவம் தொடர்பாக கணேஷ் நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். பின்னர் கொலையாளிகளை கண்டறிய மோப்பநாய் வரவழைக்கப்பட்ட நிலையில் அந்த மோப்பநாய் கொலை செய்யப்பட்ட இடத்திலிருந்து காந்திநகர் பகுதி வரை சென்றது.
இந்நிலையில் தான் ண ஏற்கனவே கடந்த 2025ம் ஆண்டு ஜூன் மாதம் நான்காம் தேதி புதுக்குளம் அருகே போஸ்நகர் 8ம் வீதியைச் சேர்ந்த தினேஷ்குமாரை தற்போது கொலை செய்யப்பட்ட ஜெய சுமன் உள்ளிட்ட 8 நபர்கள் சேர்ந்து வெட்டி கொலை செய்துள்ளனர்.
இந்த வழக்கில் ஜெயசுமன் இரண்டாவது குற்றவாளியாக உள்ள நிலையில் அவர் சிறையில் அப்போது அடைக்கப்பட்டார்.
இதற்கிடையில் தான் ஜெயசுமன் சிறையில் இருந்த போது ஏற்கனவே கொலை செய்யப்பட்ட தினேஷ் குமாரின் நண்பர்களான போஸ்நகரைச் சேர்ந்த பூபதி நரிமேடு பகுதியைச் சேர்ந்த சதீஷ் அடப்பன்வயல் பகுதியைச் சேர்ந்த காதர்ஷா, அய்யனார்புரம் மூன்றாம் வீதியைச் சேர்ந்த பழனி குமார் ஆகிய நான்கு பேரும் பெட்ரோல் நிரப்பிய பீர்பாட்டிலில் நெருப்பை பற்ற வைத்து சுமனின் மனைவியும் தாயாரும் வீட்டில் இருந்த போது வீசிச்சென்றனர். இந்த சம்பவம் அப்போது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இந்த சம்பவத்தில் ஈடுபட்ட நான்கு பேரையும் போலீசார் ஏற்கனவே கைது செய்திருந்தனர். தற்போது அவர்கள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியே வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் தான் ஏற்கனவே நடந்த தினேஷ் குமாரின் கொலை சம்பவத்திற்கு பழிதீர்க்கும் வகையில் தினேஷ் குமாரின் நண்பர்கள் ஜெயசுமனை வெட்டி படுகொலை செய்திருக்கலாம் என்ற கோணத்தில் கணேஷ் நகர் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.
மேலும் அசோக் நகர் பேருந்து நிறுத்தம் அருகே கடந்த சில மாதங்களுக்கு முன்பு தான் எஃப்எல்டு மதுபான கடை திறக்கப்பட்ட நிலையில் அந்த மதுபானக்கடை திறக்கும் போது அந்த பகுதியில் இது போன்ற கொலை சம்பவம் உள்ளிட்ட சமூக விரோத செயல்கள் நடைபெறும் என சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டு அந்த கடையை மூட வலியுறுத்திய நிலையில் தற்போது அந்த மது கடைக்கு மது அருந்த சென்ற சரித்திர பதிவேடு குற்றவாளி எட்டு பேர் கொண்ட கும்பலால் பட்டப்பகலில் கொடூரமாக வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பையும் பதட்டத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
publicsocialmedia.in



