என்னுடைய லட்சியம் நிறைவேறியது நிறைவேற்றிக் கொடுத்த இறைவனுக்கு நன்றி கோ. ஸ்ரீ. ஜெய்சங்கர்-- நிறுவனர் விஜய பாரத மக்கள் கட்சி.
என்னுடைய லட்சியம் நிறைவேறியது நிறைவேற்றிக் கொடுத்த இறைவனுக்கு நன்றி
அடியேன் தொடர்ந்து 40 ஆண்டு காலமாக இந்து சமய சமுதாயப் பணி செய்து கொண்டுள்ளேன் இது அனைவரும் அறிந்ததே சுமார் நூற்றுக்கணக்கான முறை குறிப்பாக திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் கைது செய்யப்பட்டுள்ளேன் 2006 To 2011 திமுக ஆட்சியில் பூலோக வைகுண்டம் என்று போற்றப்படும் ஸ்ரீரங்கநாதர் ஆலயத்தின் முன் வைக்கப்பட்ட பெரியார் சிலை உடைப்பு விஷயத்தில் தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் அடியேன் கைது செய்யப்பட்டு சென்னை புழல் சிறையில் 6 மாதம் அடைக்கப்பட்டிருந்தேன்
அந்த நேரத்தில் என் மனதில் உருவான கரு இன்று நிறைவேறி உள்ளது
அன்றைக்கு புழல் சிறையில் என்னை பார்க்க வந்த இன்றையக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக உள்ள என் மகன் திரு. பிந்துமாதவன் ஜந்து வயது சிறுவனாக இருந்தான் சிறையில் என்னை பார்க்கும் போது சிறை கம்பிகளுக்கு இடையே என்னிடம் வருவதற்கு தாவினான் அழுதான் ஆனால் என்னிடம் அவனால் வர முடியவில்லை. அவனை அன்று நான் தூக்கி கொஞ்ச முடியவில்லை
அன்றைக்கு ஆட்சியில் இருந்த கருணாநிதி என்னுடைய வழக்கை நேரடி பார்வையில் வைத்துக் கொண்டு வேண்டும் என்றே நீதிமன்றங்களில் வாய்தா வாங்கிக்கொண்டு இழுத்தடித்துக் கொண்டிருந்தார்கள் ஆகையால் என்னால் குறித்த நேரத்தில் வழக்கை உடைத்து வெளியே வர முடியாமல் இருந்தேன் இருந்தாலும் அதைப்பற்றி எனக்கு ஒரு துளி கூட கவலை இல்லை என்பது குறிப்பிடத்தக்கது
அன்றைக்கு என்னுடைய வழக்கை என்னுடைய அருமை நண்பர் திரு. சீனிவாசன் அவர்கள் இலவசமாக எடுத்து நடத்தினார் திரு. சீனிவாசன் திருமதி. வானதி சீனிவாசன் தம்பதியினர் தேசிய பாதுகாப்புச் சட்டத்தை உடைத்தார்கள்
அதற்குப் பின்னால் நான் விடுதலை செய்யப்பட்டு நிபந்தனை ஜாமினில் வெளிய வந்தேன்
அன்றைக்கு என் மனதில் ஒரு ஏக்கம் பிறந்தது என்னுடைய குடும்பத்தில் ஒருவரை வழக்கறிஞர் ஆக்க வேண்டும் அல்லது அனைவரையும் வழக்கறிஞர் ஆக்க வேண்டும் என்று இறைவனிடம் பிரார்த்தனை செய்தேன்
அப்படி அவர்கள் வழக்கறிஞர்களாகி இந்து சமய சமுதாய பணி செய்கின்ற என்னைப் போல உள்ளவர்களுக்கு வழக்கில் ஆஜராகி போராட வேண்டும் என்று இறைவனிடம் வேண்டினேன் இன்றைக்கு அது நிறைவேறி உள்ளது
இந்து சமுதாய போராளி திரு எச். ராஜா அவர்கள் மீது திமுக அரசு தொடர்ந்த அவதூறு வழக்கில் மாதம் மாதம் முதல் தேதி ஐகோர்ட்டில் ஆஜராக வேண்டும் என்று நீதிமன்றம் நிபந்தனை விதித்துள்ளது அந்த அடிப்படையில் இன்றைக்கு நீதிமன்றத்திற்கு வந்து ஆஜரான திரு எச். ராஜா அவர்களுக்கு என்னுடைய மகன் திரு. பிந்துமாதவன் அவர்களுடைய மூத்த வழக்கறிஞர்கள்
திரு. ராமமூர்த்தி திரு.சௌந்தரராஜன் திரு.ஆதிகேசவன் ஆகியோர்களுடன் ஆஜராகி அவருக்காக போராடி உள்ளார்
இது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியும் மன நிறைவையும் தருகிறது
நான் என் மகன் வழக்கறிஞர் திரு. பிந்துமாதவன் அவர்களிடம் ஒரு கோரிக்கையை வைத்துள்ளேன் தமிழகத்திலே சித்தாந்த ரீதியான ஆட்சி மாற்றம் பூரண இந்துத்துவ ஆட்சி வருகின்ற வரை என்னைப் போன்ற போராளிகளுக்கு எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் வழக்குகளில் ஆஜராகி அவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்று நான் வைத்த கோரிக்கையை அவர் முழு மனதோடு ஏற்றுக் கொண்டுள்ளார் இது என்னுடைய பெரிய பாக்கியமாக கருதுகிறேன்
என்றும் தாய்நாட்டுப் பணியில் கோ. ஸ்ரீ. ஜெய்சங்கர்-- நிறுவனர் விஜய பாரத மக்கள் கட்சி



