நுகர்பொருள் வாணிப அலுவலகத்தில் நடக்கு மெஹா கொள்ளை!!! கிடங்குகளில் பணியாற்றும் பணியாளர்களை கசக்கி பிழியும் அலுவலர் மூர்த்தி!  மூர்த்திக்கு முற்றுப்புள்ளி வைக்குமா அரசு? 

நுகர்பொருள் வாணிப அலுவலகத்தில் நடக்கு மெஹா கொள்ளை!!! கிடங்குகளில் பணியாற்றும் பணியாளர்களை கசக்கி பிழியும் அலுவலர் மூர்த்தி!  மூர்த்திக்கு முற்றுப்புள்ளி வைக்குமா அரசு? 
நுகர்பொருள் வாணிப அலுவலகத்தில் நடக்கு மெஹா கொள்ளை!!! கிடங்குகளில் பணியாற்றும் பணியாளர்களை கசக்கி பிழியும் அலுவலர் மூர்த்தி!  மூர்த்திக்கு முற்றுப்புள்ளி வைக்குமா அரசு? 

நுகர்பொருள் வாணிப அலுவலகத்தில் நடக்கு மெஹா கொள்ளை!!! கிடங்குகளில் பணியாற்றும் பணியாளர்களை கசக்கி பிழியும் அலுவலர் மூர்த்தி!  மூர்த்திக்கு முற்றுப்புள்ளி வைக்குமா அரசு?

புதுக்கோட்டை மாவட்ட நுகர் பொருள் வாணிப கழக அலுவலகத்தில் நடக்கும் மாபெரும் கொள்ளை, விவசாயிகள் விழி பிதுங்கி நிற்கும் நிலை , புதுக்கோட்டை மாவட்டத்தில் 12 தாலுகா, 13 ஒன்றியங்கள் உள்ளன, இவற்றிற்கு உட்பட்ட விவசாய கிராமங்கள் பல, அதாவது புதுக்கோட்டை மாவட்டம் முழுவதுமே விவசாயத்தை உள்ளடக்கிய மாவட்டமாகும்.

புதுக்கோட்டை மாவட்ட நுகர் பொருள் வாணிப கழக அலுவலக தலைமை அலுவலராக பணியாற்றி வருபவர் திரு.சீத்தாராமன் ஆவார். இவருக்கு முன்னோடியாக அவ்வலுவலகத்தில் வசூலில் சீனியராக பணியாற்றி வசூலில் இரண்டு ஆண்டுகாலம் சாதனை படைத்தவர் மூர்த்தி ஆவார்.      வசூலில் கண்ணும் கருத்துமாக இருந்து  முறையாக பணத்தை (லஞ்சத்தை) விவசாயிகளிடமிருந்தும் கட்டாயமாக விவசாயிகள் தந்தாலும் தராவிட்டாலும் பில் கிளார்க்குகள் மூலம் வாராவாரம் ஒவ்வொரு வாரத்திற்கும் விவசாயிகளிடம் இருந்து நெல்கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் எண்ணிக்கையின்படி, ஒரு மூட்டைக்கு ரூ.60 ரூபாயைப் கட்டாயம் பெற்றுகொடுத்தவராவர் இந்த  மூர்த்தி, அதாவது விவசாய விளைச்சளுக்கு ஏற்ப மாவட்ட அலுவலரால் நியமிக்கப்பட்டவர் ஆவார் இவர். வசூலுக்காக மூர்த்தி இரண்டு ஆண்டுகள் கண்காணிப்பாளராக இருந்து மாவட்டம் முழுவதும் விவசாயமாகும் நெல்களுக்கு ஒரு மூட்டைக்கு ரூ.60 என வசூல் செய்து ஒரு வாரத்திற்கு மட்டும் சுமார் 70 லட்சம் முதல் ஒரு கோடி வரை லஞ்சங்களை பெற்று விவசாயிகளின் வயிற்றில் மண்ணை அள்ளிபோட்டு வருகின்றார்.              வசூலாகும் லஞ்சங்களை மூர்த்தி தன் பங்கீட்டை எடுத்துக்கொண்டு, மாவட்ட அலுவலர் திரு.சீத்தாராமன் அவர்களின் வசம் மீதம் லஞ்சம் சென்றுவிடுகிறது.

 மூர்த்தி அவர்கள் இரண்டு முறை விவசாயிகளிடமிருந்து நன்றாக வசூல் செய்து பணங்களை கொடுத்ததால் இந்தாண்டும் அவரையே நிரந்தரமாக நியமிக்க உள்ளனர் கண்காணிப்பாளராக சீனியாரிட்டிப்படி மூர்த்தி அவர்களையே ஆனால் மூர்த்தியோட அரசு பணி என்ன என்றால் அலுவலகத்தில் தனது இருக்கையில் அமர்ந்து எந்தந்த சென்டர்களில (DPC)  எத்தனை மூட்டைகள் பெறப்பட்டன என்று  அந்த இருக்கையில்  அமர்ந்து கணக்கீடு செய்வதுதான் மூர்த்தியின் பணி. ஆனால்  நுகர்பொருள் வாணிப அலுவலகத்தில் விவசாயிகளிடம் நெல் கொள்முதல் செய்ய 300 க்கும் மேற்ப்பட்ட பணியாளர்கள் சென்டர்களில்  பில்கிளர்க், பாதுகாவளர் என அனைவரையும் விட்டு வைக்காமல் வாராவாரம் திங்கள்கிழமை மாலை 5 மணிக்குள் தங்களது சென்டரில் எத்தனை மூட்டைகள் இரக்கப்பட்டன என கணக்குகள் போட்டு கரராக மூர்த்தி அவர்கள் பணிபுரியும் பணியாளர்களிடம் வாங்கி விடுவார் அப்படி இல்லாத பட்சத்தில் பணியாளர்கள் போட்டு இருக்கும் நகைகளை கூட அடவு வைத்தாவது பணத்தை சமர்ப்பிக்க வேண்டுமாம் இப்படி கொள்ளையடித்து வருகிறார் மூர்த்தி.

 ஊன்று கோளாக இருந்து வரும் சீத்தாராமன் சென்டர் பணியாளர்கள் விவசாயிகளிடம் ஒரு நெல் மூட்டைக்கு ரூபாய் 60 பெற்று  தரவில்லை என்றால்  சீத்தாராமனும், மூர்த்தியும் தங்களது 7ம் அறிவை பயன்படுத்தி தங்களது துறைக்கு மேலாக செயல்படும் அதே துறையை சேர்ந்த நுகர் பொருள் வாணிப மண்டல அலுவலகத்தில் உள்ள விஜிலென்ஸ் துறையை ஆய்விற்கு அனுப்பி நெல் மூட்டைகளில் குறைபாடுகள் உள்ளன என்றும், நெல்லின் தரம் குறைவு என்றும்,  அளவுகளில் குறைகள் உள்ளன என்று பணியாளர் மீது (Block) குற்றம் சாட்டப்பட்டு ஒரு வருடம் பணி செய்ய விடாமல் செய்து மற்றும் நிரந்தரமாக பணியை விட்டு தூக்குவது என பிரட்டி வருகின்றனர் இந்த சதிகாரர்கள்.

சீத்தாராமன் மீதும் மூர்த்தி மீதும் சென்டர்களில் பணியாற்றும் பணியாளர்களின் அளறல் சத்தம் அதிகரிக்க நமது கழுகுபார்வை குழு நேரடியாக விசாரணையில் ஈடுபட்டது அதில் வீடியோவும்  சிக்கியது, மூர்த்தி அவர்கள் சென்டரில் பணிபுரியம் ஒருவரிடம் தனி கட்டிடத்தில் கணக்கு பார்த்து வசூல் வேட்டையில் ஈடுபட்டது தொடர்பான வீடியோ அதில் வேறு ஒரு பணியாளருக்கு போனில் தொடர்பு கொண்டு தொகை இவ்வளது வரவேண்டும் என கராரக பேசுகிறார் மூர்த்தி அவர்கள் .

  நடவடிக்கை எடுத்து வீட்டிற்கு அனுப்புமா அரசு? ஊழியர்களிடம் இருந்த பணம் பெறப்பட்ட வீடியோவை ஆதாரமாக வைத்து லஞ்ச ஒழிப்புத்துறை கைது செய்து நடவடிக்கை எடுக்குமா?           அதோடு மட்டும் இல்லை 15 ஆண்டுக்கு முன்பு பல லட்சம் மதிப்பீட்டில் வருமானத்தை மீறி சொகுசு பங்களா கட்டியதாக அரசு துறையால் கிடுக்கு புடி போடப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது, தற்போது இரண்டு வருடத்திற்கு முன்பு புதுக்கோட்டை மாவட்டத்தில் மாபெரும் சொகுசு திருமண மண்டபத்தில் பல கோடிகளில் ஆடம்பர திருமணம் நடைபெற்றது, பெண்ணிற்கு போடப்பட்ட நகைகள் மட்டும் கிலோவை தாண்டியதாம், எப்படி வந்தது வருமானம், வருமானவரித்துறையும், லஞ்ச ஒழிப்புத்துறையும் ரவுண்ட் கட்டுமா விசாரணை வளையத்திற்குள்.         *தலைமை பத்திரிகையாளர்: வீ.வீரராகவன்:9443401036*