தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜயுடன் செங்கோட்டையன் நடத்திய ஆலோசனைக் கூட்டம் இரண்டு கட்டமாக நடைபெற்றுள்ளது

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜயுடன் செங்கோட்டையன் நடத்திய ஆலோசனைக் கூட்டம் இரண்டு கட்டமாக நடைபெற்றுள்ளது

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜயுடன் செங்கோட்டையன் நடத்திய ஆலோசனைக் கூட்டம் இரண்டு கட்டமாக நடைபெற்றுள்ளது.

முதல் கட்ட ஆலோசனையில் தலைவர் விஜய், செங்கோட்டையன் மற்றும் கட்சியின் மாநில நிர்வாகிகள் என்.ஆனந்த், ஆதாவ் அர்ஜுனா உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர்.

அதைத்தொடர்ந்து இரண்டாம் கட்டமாக விஜய், செங்கோட்டையன் மற்றும் வியூக வகுப்பாளர் ஜான் ஆரோக்கியசாமி ஆகிய மூவரும் ஒரு மணி நேரம் ஆலோசனை நடத்தியுள்ளனர். 

செங்கோட்டையனுக்கு நிர்வாக குழுவை வழிநடத்தும் ஒருங்கிணைப்பாளர் பதவி வழங்கப்படுகிறது.

அத்துடன் கொங்கு மண்டல பொறுப்பாளர் பதவியும் செங்கோட்டையனுக்கு வழங்கப்படுகிறது. கொங்கு மண்டலத்தின் வெற்றியை செங்கோட்டையன் உறுதி செய்ய வேண்டும். அதற்கான பணிகளை வியூக வகுப்பாளர் ஜான் ஆரோக்கியசாமி உடன் கலந்தாலோசித்து முடிவெடுப்பார்.

மேலும் செங்கோட்டையன் நேரடியாக விஜய்க்கு ரிப்போர்ட் செய்வார் என ஆலோசனைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.