ஊழல் கோட்டையாகிறதா இலுப்பூர்? - 38 லட்சத்தில் வெறும் சுவரா? இலுப்பூர் பேரூராட்சி நிர்வாகமே பதில் சொல்!

ஊழல் கோட்டையாகிறதா இலுப்பூர்? - 38 லட்சத்தில் வெறும் சுவரா? இலுப்பூர் பேரூராட்சி நிர்வாகமே பதில் சொல்!

ஊழல் கோட்டையாகிறதா இலுப்பூர்? - 38 லட்சத்தில் வெறும் சுவரா? இலுப்பூர் பேரூராட்சி நிர்வாகமே பதில் சொல்!

இலுப்பூர் பேரூராட்சிக்குட்பட்ட கரீம் நகர் மற்றும் கோல்டன் நகர் பகுதிகளில் சிறுவர் பூங்கா அமைப்பதற்காக ஒதுக்கப்பட்ட நிதி சுமார் ரூ. 38 லட்சம். ஆனால் இன்று அங்கே நிற்பது வெறும் ஒரு சுற்றுச்சுவர் மட்டுமே! 

மக்களின் வரிப்பணம் எங்கே போனது? பூங்கா எங்கே? விளையாடும் கருவிகள் எங்கே? வெறும் சுவரை எழுப்பவா 38 லட்சம் செலவானது?

மிரட்டல்களுக்கு அஞ்சப்போவதில்லை! ✊

இந்த ஊழல் குறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேள்வி எழுப்பினால், உரிய பதில் அளிக்காமல் ஆளுங்கட்சியினர் மூலம் கொலை மிரட்டல் விடுப்பதா? நேர்மையான நிர்வாகம் இருந்தால் ஏன் இந்த பயம்? ஏன் இந்த மிரட்டல்கள்?

கிடைத்தது நீதி - இணை இயக்குநரின் அதிரடி உத்தரவு! 

எத்தனை இடையூறுகள் வந்தாலும், மக்கள் நலனே முக்கியம் என்று நாம் தொடர்ந்து போராடியதன் விளைவாக, தற்போது அனைத்து பேரூராட்சிகள் இணை இயக்குனர் அவர்கள் அதிரடி குறிப்பாணை (Memorandum) ஒன்றை பிறப்பித்துள்ளார்!

குறிப்பாணை எண்: ந.க.எண்.3757/2025/பே.1.

இந்த ஊழல் விவகாரத்தில் பாரபட்சமின்றி உரிய விசாரணை நடத்தி, தவறு செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். மக்களின் ஒரு ரூபாய் வரிப்பணம் கூட வீணாக அனுமதிக்க மாட்டோம்.

எச்சரிக்கை! 

அரசு அலுவலர்களே... பொதுமக்களின் நிதியை கையாடல் செய்யலாம் என நினைத்தால், சட்டத்தின் சவுக்கடி நிச்சயம் கிடைக்கும் என்பதற்கு இந்த நடவடிக்கை ஒரு ஆரம்பம் மட்டுமே!

முறைகேடுகளைத் தட்டிக் கேட்கும் துணிச்சலை மக்களுக்கு விதைப்போம்! ஊழலற்ற இலுப்பூரை உருவாக்குவோம்!

துரை.பிரபு 

மாவட்ட தலைவர் ~ தகவல் தொழில்நுட்ப பிரிவு பாரதிய ஜனதா கட்சி, புதுக்கோட்டை.  89033 03639 | 88381 59026