புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசலில் விருத்தபுரீஸ்வரர் ஆலய மாசி மகத் தேர் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர் கொளுத்தும் வெயிலில் பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசலில் விருத்தபுரீஸ்வரர் ஆலய மாசி மகத் தேர் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர் கொளுத்தும் வெயிலில் பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே உள்ள அன்னவாசலில் ஸ்ரீ தர்மசம் வர்த்தினி சமேத ஸ்ரீ விருத்தபுரீஸ்வரர் ஆலய மாசி மக தேர் திருவிழா கடந்த 2 ஆம் தேதி காப்புக்கட்டுடன் தொடங்கியது அதனைத் தொடர்ந்து சாமிக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு வந்தது இந்நிலையில் விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது. முதல் தேரில் விருத்தபுரீஸ்வரரும் இரண்டாம் தேரில் தர்மசம் வர்த்தினியும் பக்தர்களுக்கு காட்சியளித்தனர் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். நான்கு மாட வீதிகள் வழியாக வலம் வந்தபோது கொளுத்தும் வெயிலை பொருட்படுத்தாமல் ஏராளமானோர் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர் தேர் கோவில் முன்பாக உள்ள தேர் முட்டியில் நிலை குத்தி நின்றது. இந்த தேர் திருவிழாவில் அன்னவாசல் மட்டுமல்லாது சுற்று வட்டாரங்களை சேர்ந்த கிராம மக்கள் கலந்து கொண்டனர்.
PUBLICSOCIALMEDIA.IN



