புதுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் நியாஸ் மிகவும் வித்தியாசமான முறையில் வந்து தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்தார். பத்திரிகையாளர்: வீ.வீரராகவன்
புதுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் நியாஸ் மிகவும் வித்தியாசமான முறையில் வந்து தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்தார்.
புதுக்கோட்டை அண்ணா சிலையிலிருந்து வேட்பாளர் நியாஸ் தனது கட்சியின் சின்னமான கேமராவோடு பேரணியில் பயணித்தார். மேலும், பொதுமக்களின் பிரச்சினைகளைச் சுட்டிக்காட்டும் விதமாக கைகளில் கனிம வள கொள்ளையை குறித்தும்,
தண்ணீர் தட்டுப்பாட்டை உணர்த்தும் விதத்திலும்,
மதுபாட்டில்கள், குப்பைகளை உணர்த்தும் வகையில் குப்பைகளைச் சுமந்து கொண்டு நூதன முறையில் ஊர்வலமாகச் சென்றார்.
புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் வேட்பாளர் நியாஸ் தனது வேட்புமனு தாக்கல் செய்தார்.



