புதுக்கோட்டையில் பணிகளைப் புறக்கணித்து இரண்டாவது நாளாக மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தை முற்றுகையிட்டு வருவாய் துறை ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம்.

புதுக்கோட்டையில் பணிகளைப் புறக்கணித்து இரண்டாவது நாளாக மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தை முற்றுகையிட்டு வருவாய் துறை ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம்.

வருவாய் துறை சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஒன்பது அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக முழுவதும் இன்று வருவாய் துறை சங்குகளின் கூட்டமைப்பைச் சேர்ந்தவர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக புதுக்கோட்டை மாவட்ட இரண்டாவது நாளாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இந்த ஒன்பது அம்ச கோரிக்கையை வலியுறுத்தி வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பை சேர்ந்தவர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில்வருவாய் துறை மற்றும் பேரிடர் மேலாண்மை துறை நில அளவை துறையில் பணிபுரிந்து வரும் அனைத்து நிலையிலான அலுவலர்களின் உயிர் மற்றும் உடைமைகளை பாதுகாக்கவும் குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனைகள் வழங்கிடவும் சிறப்பு பணி பாதுகாப்பு சட்டத்தை உடனே ஏற்ற வேண்டும்

இந்த மூன்று துறையில் பணியாற்றி வரும் அலுவலர்களின் பணித்தன்மை மற்றும் பணிபளுவை கருத்தில் கொண்டு அனைத்து நிலை அலுவலர்களுக்கும் மேம்படுத்தப்பட்ட ஊதியம் மற்றும் தனி ஊதியம் வழங்கிட வேண்டும் கிராம உதவியாளர்களுக்கு வரையறுக்கப்பட்ட கால முறை ஊதியம் வழங்கிட வேண்டும் என்பது உள்ளிட்ட ஒன்பது அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் தமிழகம் முழுவதும் இன்று காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.