புதுக்கோட்டையில் இருந்து தொண்டி சென்ற தனியார் பேருந்தில் நான்கரை கோடி மதிப்பு கொண்ட உயர்ரகப் போதைப்பொருள் சிக்கியது.

புதுக்கோட்டையில் இருந்து தொண்டி சென்ற தனியார் பேருந்தில் நான்கரை கோடி மதிப்பு கொண்ட உயர்ரகப் போதைப்பொருள் சிக்கியது.

புதுக்கோட்டையில் இருந்து தொண்டி சென்ற தனியார் பேருந்தில் நான்கரை கோடி மதிப்பு கொண்ட உயர்ரகப் போதைப்பொருள் சிக்கியது.

புதுக்கோட்டையில் இருந்து தொண்டி சென்ற தனியார் பேருந்தில் உயர் ரக போதை பொருள் கடத்திச் செல்லப்படுவதாக தொண்டியை சேர்ந்த சுங்கத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்ததின் அடிப்படையில் ராமநாதபுரம் சுங்கத்துறை இணை ஆணையர் பிரகாஷ் மற்றும் தொண்டி அதிகாரிகள் நேற்று மதியம் எஸ்.பி.பட்டினத்தை அடுத்து உள்ள கலியநகரி கிராமத்தின் அருகே சோதனையில் ஈடுபட்டனர் அப்போது புதுக்கோட்டையில் இருந்து தொண்டி நோக்கி சென்று கொண்டிருந்த தனியார்பேருந்தை வழி மரித்து சோதனை செய்தனர் அந்தப் பேருந்தில் பயணிகள் உடமை வைக்கும் இடத்தில் சந்தேகப்படும் வகையில் ஒரு பாலித்தீன் பை ஒன்று இருந்தது அதனை கைப்பற்றி பிரித்து பார்த்தபோது அதில் உயர் ரக ஐஸ் போதை பொருள் இருந்தது அந்த போதைப் பொருளின் மதிப்பு சுமார் நான்கரை கோடி ஆகும் உடனே சுங்கத்துறை அதிகாரிகள் அந்த பேருந்தை முழுமையாக சோதனை செய்தனர். அந்தப் போதை பொருளை கடத்தி வந்தவர் யார் என தெரியாததால் பேருந்தை இயக்கி வந்த ஓட்டுநர் மற்றும் நடத்துனரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர் உயர்ரக ஐஸ் போதை பொருள் சுமார் ஒன்றரை கிலோ இடையில் கைப்பற்றப்பட்டுள்ளது இதன் சர்வதேச மதிப்பு சுமார் நான்கரை கோடி என கூறப்படுகிறது இந்த நடவடிக்கையால் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்ப்பட்டது இந்த போதை பொருளை கடத்தியவர் யார் என்பதும், பங்குதாரர்கள் யார் என்பது பற்றி தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர் சுங்கத்துறை அதிகாரிகள்.