திருவுடையார்ப்பட்டி கிராமத்தில் உள்ள (காசிக்கும் வீசம் கூட) என்ற புகழ் கொண்ட (நீத்தார் ஈமக்கிரியை இறுதி சடங்கு) நடைபெறும் ஸ்ரீதிருமூலநாதர், ஸ்ரீதிரிபுரசுந்தரி, நீத்தார்க்களுக்கு அடைக்கலம் கொடுக்கும் வெள்ளாற்றங்கறையிலிருந்து அருபாலித்து வரும் எல்லாம் வல்ல இறைவன் ஈசன் திருக்கோவிலில் நடக்கும் அவலம் என்ன என்ன!!! புதுக்கோட்டை (EO) இந்து சமய அறநிலையத்துறை அலுவலர் கண்டுகொள்ளாத காரணம் என்ன?
திருவுடையார்ப்பட்டி கிராமத்தில் உள்ள (காசிக்கும் வீசம் கூட) என்ற புகழ் கொண்ட (நீத்தார் ஈமக்கிரியை இறுதி சடங்கு) நடைபெறும் ஸ்ரீதிருமூலநாதர், ஸ்ரீதிரிபுரசுந்தரி, நீத்தார்க்களுக்கு அடைக்கலம் கொடுக்கும் வெள்ளாற்றங்கறையிலிருந்து அருபாலித்து வரும் எல்லாம் வல்ல இறைவன் ஈசன் திருக்கோவிலில் நடக்கும் அவலம் என்ன என்ன,
நடக்கும் முறைகேடுகளில் புதுக்கோட்டை இந்துசமய அறநிலைத்துறை அலுவலர் அவர்களுக்கு பங்கிடா ?

புலம்பும் ஈமக்கிரியை செய்யப் போகும் பொதுமக்கள்!
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி தாலுகா, திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியம், வாண்டாக்கோட்டை பஞ்சாயத்து திருவுடையார்ப்பட்டி கிராமத்தில் வெள்ளாற்றங்கறையில் பூர்வ புண்ணியஸ்தளமாக விளங்கும் காசிக்கும் வீசம் கூட என்ற புகழ்பெற்ற மற்றும் புதுக்கோட்டை மாவட்டம் அல்லாது தஞ்சை, சிவகங்கை, திருச்சி, மதுரை மற்றும் பல மாவட்டங்கள் மற்றும் பல மாநிலங்களில் இருந்து நீத்தார் ஈமக்கிரியை இறுதிச்சடங்கு தினம் தினம் 10 முதல் 20 சடங்குகள் வரை அர்ச்சகர்களால் நடைபெற்று வருகிறது.

புண்ணியத்தளமான திருமூலநாதர் கோவிலில் பிரார்த்தித்து இடுகாட்டில் இருந்து எடுத்துச் செல்லும் அங்கங்களை ஆற்றில் கரைத்து பிரார்த்தனை செய்து வருகின்றனர் இறந்தவர்களின் ஆத்மா இறைவனிடம் செல்லும் என்ற நம்பிக்கையில் உற்றார் உறவினர்கள் .
அது ஒரு புறம் இருக்க இது போன்ற சம்பவங்களை பயன்படுத்தி கோவில் மட்டுமல்லாது பல திருக்கோயில்களில் நடக்கும் அவலங்கள் பல பல!

திருவுடையார்பட்டி திருமூலநாதர் திருக்கோவிலில் நடக்கும் அவலங்களை மட்டும் விவரிக்கின்றேன் அந்த ஆற்றங்கரை அருகே ஒருவர் தனியாக இடம் வாங்கி ஒரு ஈமக்கிரிகைக்கு 7,500 முதல் 10,000 பிடுங்குவது மிக ஒரு பெரிய அவலம், அது ஒரு புறம் இருக்க வாண்டாக்கோட்டை பஞ்சாயத்தில் முக்கியஸ்தர்கள் என்று கூறக்கூடிய ஒருசிலர் திருக்கோவிலை பயன்படுத்தி ஒரு ஈமக்கிரியை சடங்கிற்கு ரூ.500 வசூல் செய்து வருவது அதை விட மிகப்பெரிய ஒரு அவலமாக உள்ளது, மற்றொன்று திருமூலநாதர் கோவிலில் அர்ச்சகராக உள்ளவர் அரசு கொடுக்கும் ஊதியம் பத்தாது என்று வலுக்கட்டாயமாக ஈமக்கிரியை செய்ய வருபவர்களிடம் ரூ:200 முதல் ரூ:500 வரை புடுங்கி வருகிறார்கள் அதோட இல்லாமல் ஒரு ஈமக்கிரியை செய்ய 500 ரூபாயில் அந்த அர்ச்சகருக்கு மாதம் தோறும் பத்தாயிரம் தனிப்பட்ட நபர்கள் கொடுத்து வருகின்றனர் வசூலித்து வரும் பணத்தில்.
திருமூலநாதர் கோவிலில் அர்ச்சகர் பிரார்த்தனைக்கு வருபவர்களிடம் கருவறைக்குள் சென்று தேங்காய் உடைத்து, அர்ச்சனை செய்து உள்ளே சென்று தீபாரதனை காமிக்க முழு அதிகாரம் உள்ளது என்றும் ஆனால் அவர் ஏற்படுத்தும் குப்பைகளை கருவறைக்குள் அர்ச்சகர் அதை அப்புறவு செய்யாமல், கோவிலில் பணிபுரியும் கீழ்நிலை பணியாளர்களை துப்புரவு செய்ய வற்புறுத்தி வருவதாகவும், அதை துப்புரவு செய்யாமல் விட்டால் புகைப்படம் எடுத்து மிரட்டுவேன் என்றும் செயல்படுவது அதைவிட ஒரு கேவலமாக உள்ளது.
திருவுடையார்பட்டி வெள்ளாற்று கரையில் ஈமக்கிரியை செய்ய வரும் பக்தர்களின் துணிகளை அகற்றுவதற்கு என்று செயல்படும் இருவருக்கு, அரசு ஊதியம் கொடுப்பதில்லை ஆகையால் மட்டுமே இமைக்கிறியை செய்ய வரும் நபர்களிடம் ரூ:500 வசூல் செய்து கொடுத்து வருகிறோம் என்று பதில் சொல்லும் நபர்கள் தெரிவிக்கின்றனர்,
மற்றொன்று இந்து சமய அறநிலைத்துறை அலுவலர் அவர்களுக்கு மாதம் பத்தாயிரம் கொடுக்க வேண்டும் என்றும் அந்த முக்கியஸ்தர்கள் வசூல் செய்பவர்கள் அதிகாரப்பூர்வமாக கூறுகிறார்கள் வசூல் செய்யும் நபர்கள்.
இதுதிருக்கோவில? இல்லை தனிநபர் கோவிலா? அரசு ஏன் விளம்பரப் பலகை ஏன் வைக்கவில்லை? ஒரு ஈமக்கிரியைக்கு அரசுக்கு செலுத்த வேண்டிய தொகை எவ்வளவு, அர்ச்சகர்க்கு கொடுக்க வேண்டிய தொகை, அர்ச்சனை ரசீதின் தொகை என விளம்பர பதாகை வைக்காமல் செயல்படுவது இந்து சமய அறநிலைத்துறை அலுவலரின் தராதரமற்ற கடமையாக உள்ளது?
இந்த கோவிலில் மட்டுமல்ல புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து கோவிளிலும் பல அவலங்கள் நடக்கிறது,
மற்றொன்று அந்த கோவிலில் நடக்கும் அவலம் கீழ்நிலை பணியாளர்களை வீன்பலி சுமத்தி மிரட்டுவதும் அநாகரிகமாக உள்ளது.
அக்கோவிலில் ஊர் முக்கியஸ்தர்கள் சிலர் மற்றும் அர்ச்சகர்கள் மற்றும் விதண்டாவாதிகள் செய்யும் பல அட்டூழியங்கள் எங்களது publicsocialmedia.in செய்தி தளத்திற்கு வருகிறது பொதுமக்களால்.
உடனடியாக அர்ச்சகர் மீதும் வசூல் செய்யும் முக்கியஸ்தர்கள் மீதும் உடனடி நடவடிக்கை இல்லை என்றால் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள திருக்கோவிலில் நடக்கும் அவலங்களை ஆதாரப்பூர்வமாகவும், அதிகாரப்பூர்வமாகவும் எங்களது publicsocialmedia.in வெளியிடும் உங்கள் மீது நடவடிக்கை எடுக்கும் வரை தமிழக அரசு, ஏன் லஞ்ச ஒழிப்பு துறைக்கும் ஆதாரங்களை கொண்டு செல்லப்படும் நடவடிக்கை எடுக்க கோரி!

ஆலாங்குடி வருவாய்த் துறையிடம் பல முறை தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது வெள்ளாற்றில் மணல் திருட்டு நடைபெருகிறது என்று அதை இன்று வரை தடுக்கவில்லை வருவாய்த்துறை, மற்றொன்று காவல் துறை மூலமாகவும் தகவல் வருகிறது மணல் கொள்ளை அதிகமாக நடைபெருகிறது என்று!
publicsocialmedia.in



