கொடைக்கானல் வட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வரும் வெள்ளிக்கிழமை அன்று காலை 10.30 மணிக்கு கொடைக்கானல் RDO அலுவகத்தில் நடக்கிறது இந்த கூட்டத்திற்கு அனைவரும் வருக பயன்பெறுக.
கொடைக்கானல் வட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வரும் வெள்ளிக்கிழமை அன்று காலை 10.30 மணிக்கு கொடைக்கானல் RDO அலுவகத்தில் நடக்கிறது இந்த கூட்டத்திற்கு அனைவரும் வருக பயன்பெறுக.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் வட்டத்தில் உள்ள கொடைக்கானல் மற்றும் கொடைக்கானல் மேல்மலை மற்றும் கீழ்மலை கிராமங்களில் உள்ள அனைத்து பகுதி பொதுமக்கள் மற்றும் அனைத்து விவசாயிகளின் நலனுக்காக 2026 பிப்ரவரி மாதத்திற்கான விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நமது கொடைக்கானல் வருவாய் கோட்டாட்சியர் அலுவகத்தில் வருகின்ற 27. 2. 2026 வெள்ளிக்கிழமை காலை சுமார் 10.30 மணி அளவில் நமது கொடைக்கானல் வருவாய் கோட்டாட்சியர் உயர்திரு திருநாவுக்கரசு அவர்கள் தலைமையிலும் மற்றும் 16 துறைகளின் முதல்நிலை அதிகாரிகள் விவசாயிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பொதுமக்கள் ஆகியோர்களின் முன்னிலையில் நடைபெறும் இந்த விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும்
மேலும் நீங்கள் ஏற்கனவே இதற்கு முன்பு கொடைக்கானலில் நடைபெற்ற விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் நீங்கள் கலந்து கொண்டு பேசிய மற்றும் கொடுத்த கோரிக்கை மனுக்கள் மீது அதிகாரிகள் உரிய முறையில் விசாரணை நடத்தி உங்களது மனு மீது உரிய நடவடிக்கை எடுத்து அதனால் உங்களுக்கும் அரசுக்கும் உண்மையான பதில் கடிதம் அனுப்பிய சம்பந்தப்பட்ட துறையின் அனைத்து அரசு அதிகாரிகளுக்கும் இந்த விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் நன்றி கூறுங்கள் .
அதே போல் நீங்கள் ஏற்கனவே முன்பு நடைபெற்ற விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் பேசிய மற்றும் நீங்கள் கொடுத்த மனுக்களைப் பெற்றுக் கொண்டு அந்த மனுக்கள் மீது இன்று வரை உரிய விசாரணை செய்யாமல் நடவடிக்கை எடுக்காமல் அதனால் உங்கள் மனுக்களுக்கு உரிய பதில் கடிதம் அனுப்பாமல் உங்களையும் தமிழக அரசையும் ஏமாற்றி வரும் சம்மந்தப்பட்ட அனைத்து துறைகளின் அரசு அதிகாரிகளிடம் எனது மனு மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது ஏன் எனது மனுவிற்கு இன்று வரை உண்மையான பதில் கடிதம் அனுப்பவில்லை என்று இந்த கூட்டத்தில் கேள்வியும் கேட்டு அதனால் அதிகாரிகளிடம் முறையான நீங்கள் விளக்கமும் கேட்டு தெரிந்து கொண்டு பயன் பெற வேண்டும்.
அதே போல் கொடைக்கானல் மேல்மலை மற்றும் கீழ்மலைப்பகுதிகளில் உள்ள அனைத்து பகுதிகளிலும் வசித்து வரும் விவசாயிகள் மற்றும் பொது மக்களுக்கு வருங்காலத்திற்கு தேவையான அனைத்து பொது நலன் சார்ந்த விவசாயம் அதற்கு தேவையான அடிப்படை வசதிகள் சம்மந்தமான அனைத்து பொது நல கோரிக்கைகளையும் இந்த கூட்டத்தில் நீங்கள் அனைவரும் பேசுவதுடன் அதை கோரிக்கை மனுக்களாக எழுதிக்கொண்டு வந்து விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தின் தலைவர் அவர்களிடம் நமது விவசாயிகள் அனைவரும் நேரில் மனுக்களாக எழுதிக்கொடுத்திடவும் அதனால் நீங்கள் மட்டுமல்ல உங்கள் கொடைக்கானல் வட்டத்தில் உள்ள அனைத்து பகுதியை சேர்ந்த விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் பயன்பெறுவதற்கு தாங்கள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு பயன்பெறும்படி உங்களை அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் நன்றி.
இப்படிக்கு
தாண்டிக்குடி கணேஷ்பாபு
சமூக ஆர்வலர்
செல் 9159084529
இணைப்பு :
கொடைக்கானல் வட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்திற்கு அரசு அனுப்பிய அழைப்பிதழை படித்து பாருங்கள் கூட்டத்துக்கு வாருங்கள் பயன்பெறுங்கள் நன்றி.



