விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் வெளி மாவட்டங்களிலிருந்து விவசாயிகள் அல்லாத நபர்கள் போலி ஆவணங்கள் தயார் செய்து நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் விற்பனை செய்வதாக பரவலாக புகார் வரப்பெறுகிறது.
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், புதுக்கோட்டை மண்டலத்தில் நடப்பு கே.எம்.எஸ் 2025 - 2026 சம்பா பருவத்தில் விவசாயிகளின் நலன் கருதி இதுநாள் வரை 219 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்க உத்தரவிடப்பட்டு, தற்பொழுது 136 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் 22,732 மெ.டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு அதற்குண்டான தொகை ரூ.50.00 கோடி விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் வெளி மாவட்டங்களிலிருந்து விவசாயிகள் அல்லாத நபர்கள் போலி ஆவணங்கள் தயார் செய்து நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் விற்பனை செய்வதாக பரவலாக புகார் வரப்பெறுகிறது.
இதுபோன்ற சட்ட விரோத நடவடிக்கையில் ஈடுபடும் நபர்கள் மற்றும் அதற்கு உடந்தையாக செயல்படும் பருவகால பணியாளர்கள் மற்றும் கொள்முதல் அலுவலர்கள் மீது 1955-ஆம் ஆண்டு இயற்றப்பட்ட அத்தியாவசிய பொருட்கள் சட்டம் மற்றும் கள்ளச்சந்தை தடுப்பு மற்றும் அத்தியாவசிய பண்டங்களின் விநியோகம் பராமரிக்கும் சட்டம் 1980 ஆகியவற்றின் கீழ் சட்ட ரீதியாக கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சித் தலைவர் புதுக்கோட்டை அவர்களால் தெரிவிக்கப்படுகிறது.
வெளி மாவட்ட நெல் விற்பனை / நெல் வியாபாரிகள் தலையீடு தொடர்பான புகார்கள் வரப்பெற்றால் கீழ்காணும் தொலைப்பேசி எண்களில் தொடர்புகொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறது.
மண்டல மேலாளர் அலைபேசி எண் 9443101720, மேலாளர் (த.க) 9626610792, விழிப்புப்பணி அலுவலர் 044 -26424560, பொது மேலாளர் (சந்தை) 044 -26422448 & 26424560, கட்டணமில்லா தொலைபேசி எண் 18005993540 ஆகும்.
மேற்கண்ட தகவலை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.மு.அருணா, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.



