வடவாளத்திற்கு முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதா வந்து சென்ற கிராம பஞ்சாயத்தில் தேர்தல் புறக்கணிப்பா?
வடவாளத்திற்கு முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதா வந்து சென்ற கிராம பஞ்சாயத்தில் தேர்தல் புறக்கணிப்பா?
புதுக்கோட்டை மாவட்டம் புதுக்கோட்டை ஊராட்சி ஒன்றியம் கிராம பஞ்சாயத்தில் பல சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் பல பாராளுமன்ற மற்றும் கிராம ஊராட்சி பிரதிநிதிகள் பல ஆண்டுகாலமாக தேர்தலில் கோரிக்கைகளை நிறைவேற்றி தருவதாக வாக்கு சேகரிப்பது கிராம மக்களின் அடிப்படை வசதிகளான சாலை வசதிகள், குடிநீர், பேருந்து வசதிகள் மற்றும் சண்டை சச்சரவுகள் இல்லாத நாடக மேடைகள் என சிறு சிறு தேவைகளை பூர்த்தி செய்து தருகிறோம் என்ற வெத்து வெட்டு வாய்மொழி பேச்சுக்களால் மட்டுமே!
அதன் பிறகு எந்த ஒரு மக்கள் பிரதிநிதிகளும் கிராம புறங்களுக்குள் எவரும் தலைவைத்துக் கூட படுப்பதில்லை.
மக்கள் பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கும் வாக்கு சாவடிக்கு கூட 5 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மையத்தையே தேடி போகும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாம்.
மேற்கண்ட அடிப்படை தேவைகள் பூர்த்தி செய்யாததாலும் மற்றும் மக்கள் பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்கும் வாக்குச்சாவடி மையத்தை அடைய ஐந்து கிலோமீட்டர் நடந்து செல்லும் அவளத்தாலும் இம்முறை தேர்தலை புறக்கணிப்பு செய்யப் போவதாக பிளக்ஸ் பேனர்களில் விளம்பரப்படுத்தி உள்ளனர் ஆங்காங்கே கிராம பொதுமக்கள்!
பத்திரிகையாளர்: வீ.வீரராகவன்




