புதுக்கோட்டை மாவட்ட மின்சாரவாரிய இயக்களும், காத்தலும் தலைமை செயற்பொறியாளர் அவர்களின் கவனத்திற்கும் & உட்கோட்ட பிரிவு மச்சுவாடி உதவி செயற்பொறியாளர் அவர்களுக்கும், ஒரு பத்திரிகையாளனாக இல்லாமல் ஒரு விவசாயியாக வேண்டுகோள் வீ.வீரராகவன்!
புதுக்கோட்டை மாவட்ட மின்சாரவாரிய இயக்களும், காத்தலும் தலைமை செயற்பொறியாளர் அவர்களின் கவனத்திற்கும் & உட்கோட்ட பிரிவு மச்சுவாடி உதவி செயற்பொறியாளர் அவர்களுக்கும், ஒரு பத்திரிகையாளனாக இல்லாமல் ஒரு விவசாயியாக வேண்டுகோள் வீ.வீரராகவன்!

புதுக்கோட்டை மாவட்டம், மச்சுவாடி மின்சார வாரிய பிரிவு அலுவலகம், வடவாளம் வட்டம், தெற்குசெட்டியாப்பட்டி குக்கிராமம் அதில் மணிபல்லவழிச்சாலை, தெற்கு செட்டிபட்டி பேருந்து நிறுத்தம் அதன் அருகில் அமைந்துள்ள மின்தாங்கி (டிரான்ஸ்பார்மர்) அதுக்கு உட்பட்ட மும்முனை மின்சாரம் மூலம் பல விவசாய குடும்பங்கள் ஆள்குளாய் கிணறு அமைத்து விவசாயம் செய்து வருகின்றனர் சுமார் 25க்கும் மேற்பட்ட ஆழ்குழாய் கிணறு உள்ளன, அந்த ஒரு மின் தாங்கி ஆள்குழாய் கிணறுகளுக்கு போதுமான மின் வழங்க முடியாமல் அடிக்கடி அந்த மின் மாற்றி வெடிக்கிறது அதனால் முற்றிலும் விவசாயம் பாதிப்படைகிறது.
நேற்று முன் தினம் அந்த மின்மாற்றி பழுதடைந்தது அதை சீரமைத்து மீண்டும் இயங்க வைத்தனர் மீண்டும் இன்று அந்த மின்தாங்கி பெட்டி வெடித்து விட்டது முற்றிலும் மின் வினியோகம் நிறுத்தம் ஆகிவிட்டது,
இரண்டு வருடத்திற்கு முன்பே புதுக்கோட்டை இயக்கலும், காத்தலும் மின்சார தலைமை செயற்பொறியாளர் அவர்களிடம் மனு கொடுக்கப்பட்டிருந்தது அந்த மின் தாங்கியோடு இணைப்பாக மற்றொன்று மின்தாங்கி பொருத்தினால் போதுமான மின்சாரம் விவசாயத்திற்கு கிடைக்கும் என்று மனு கொடுக்கப்பட்டிருந்தது, அவர்களின் பணி சுமை காரணமாக கண்டு கொள்ளவில்லை தற்போது உள்ள புதுக்கோட்டை மாவட்ட தலைமை செயற்பொறியாளர் அவர்களிடம் தகவல் கொடுக்கப்பட்டுள்ளது ஆகவே தற்போது வெடித்துள்ள மின் தாங்கி பெட்டி பொருத்தும் போது இணைப்பாக இன்னொரு பின் தாங்கி பெட்டியும் இணைத்து கொடுத்தால் விவசாயத்திற்கு ஒரு வாழ்வாதாரமாக பொருந்தும் என்பதை வேண்டுகோளாக தெரிவித்துக் கொள்கிறேன்.
பத்திரிகையாளர்: வீ.வீரராகவன்



