புதுக்கோட்டையைச் சேர்ந்த ஏவிஎம் பாபுவின் காளை நரசிம்மா ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்துகொண்டு வாடிவாசலிலிருந்து அவிழ்த்து விடப்பட்ட நரசிம்மா காலை கிட்டத்தட்ட பத்து நிமிடங்களுக்கு மேல் வாடிவாசலில் காளையர்களை தெறிக்கவிட்டு அங்கும் இங்கும் நாளாபிரமும் குத்தி தூக்கி எறிந்தது மேலும் அதிக நேரம் வாடிவாசலில் நின்று விளையாடிய காலை நரசிம்மாவை தமிழ்நாடு அரசு சார்பில் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் சிறந்த காளையாக அறிவிக்கப்பட்டது.

  ஒவ்வொரு வருடமும் உலகப் புகழ்பெற்ற மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் பாலமேடு அவனியாபுரம் ஆகிய பகுதிகளில் பொங்கல் பண்டிகை முன்னிட்டு தொடர்ந்து மூன்று நாட்கள் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம்.

 இந்த ஜல்லிக்கட்டு போட்டிகளில் தங்கள் காளைகளை பங்கேற்க வைப்பதற்காக ஜல்லிக்கட்டு காளை வளர்ப்பவர்கள் பலர் முண்டியடித்துக் கொண்டு டோக்கன்களை வாங்கி ஜல்லிக்கட்டு போட்டியில் தங்கள் காளைகளை அவிழ்த்து விடுவார்கள் அப்படி ஒரு காலையாக புதுக்கோட்டையை சேர்ந்த தொழிலதிபர் ஏவிஎம் பாபு பத்துக்கு மேற்பட்ட ஜல்லிக்கட்டு காளைகளை வளர்த்து வருகிறார்.

 இந்நிலையில் கடந்த ஏழு மாதத்திற்கு முன்பு நரசிம்மா என்ற ஜல்லிக்கட்டு காளைகளை வாங்கி பராமரித்து பல்வேறு பயிற்சிகள் அளித்து வந்துள்ளார் இந்நிலையில் கடந்த வாரம் அலங்கநல்லூரில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் புதுக்கோட்டையைச் சேர்ந்த ஏவிஎம் பாபுவின் காளை நரசிம்மா ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்துகொண்டு வாடிவாசலிலிருந்து அவிழ்த்து விடப்பட்ட நரசிம்மா காலை கிட்டத்தட்ட பத்து நிமிடங்களுக்கு மேல் வாடிவாசலில் காளையர்களை தெறிக்கவிட்டு அங்கும் இங்கும் நாளாபிரமும் குத்தி தூக்கி எறிந்தது மேலும் அதிக நேரம் வாடிவாசலில் நின்று விளையாடிய காலை நரசிம்மாவை தமிழ்நாடு அரசு சார்பில் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் சிறந்த காளையாக அறிவிக்கப்பட்டது.

 மேலும் சிறந்த காளையாக அறிவிக்கப்பட்ட நரசிம்மா காளைக்கு அதன் உரிமையாளர் ஏவிஎம் பாபுவிடம் முதல் பரிசாக நாட்டு மாடு கன்று குட்டி 12 லட்சம் ரூபாய் மதிப்பில் டிராக்டர் வாகனமும் வழங்கப்பட்டது இதனை பெற்றுக் கொண்ட காளையின் உரிமையாளர் பாபு இன்று புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அருணாவை சந்தித்து வாழ்த்துக்களை பெறுவதற்காக பரிசாக பெற்ற நாட்டு மாடு கன்று மற்றும் குட்டி டிராக்டர் உள்ளிட்டவைகளை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஊர்வலமாக எடுத்துச் சென்று மாவட்ட ஆட்சியரை சந்தித்து முதல் பரிசாக வழங்கப்பட்ட டிராக்டர் மற்றும் நாட்டு மாடுகள் சான்றிதழையும் காண்பித்து வாழ்த்துக்களை பெற்றுக் கொண்டார் இந்த நிகழ்வில் ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

  இதுகுறித்து நரசிம்மா காளையின் உரிமையாளர் பாபு கூறுகையில் நான் பல வருடங்களாக ஜல்லிக்கட்டு காளையை வளர்த்து வருகின்றேன் தமிழ்நாடு முழுவதும் பல்வேறு ஜல்லிக்கட்டு போட்டிகளில் என்னுடைய காளை பங்கேற்று பல்வேறு பரிசுகளை பெற்றுள்ளது ஆனால் முதல் முறையாக அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் சிறந்த காளையாக தேர்வு செய்யப்பட்டு தமிழ்நாடு அரசு சார்பில் வழங்கப்பட்டுள்ள முதல் பரிசு பெற்றிருப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கிறது புதுக்கோட்டை மாவட்டம் மட்டுமல்ல உலகம் முழுவதும் எனக்கு பெரும் மதிப்பும் கிடைத்துள்ளது என தெரிவித்தார்.

பத்திரிகையாளர்: வீ.வீரராகவன்:9443401036