ஆலங்குடி தொகுதி ஒரு பார்வை
ஆலங்குடி தொகுதி ஒரு பார்வை
இந்த தொகுதி 1957 முதல் தேர்தல்களைச் சந்தித்து வருகிறது. விவசாயம் செழிப்பான இந்தப் பகுதி, நிலக்கடலை மற்றும் முந்திரி சாகுபடிக்கு பெயர் பெற்றது. தற்போது இது சிவகங்கை மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஒரு சட்டமன்றத் தொகுதியாக உள்ளது.
மாவட்டம் புதுக்கோட்டை
இத்தொகுதியில் முத்தரையர் மற்றும் கள்ளர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் பெரும்பான்மையாக உள்ளனர். இவர்களது வாக்குகள் வெற்றியைத் தீர்மானிக்கும் காரணியாக அமைகின்றன.
ஆசியாவிலேயே பெரிய குதிரை சிலை அமைந்துள்ள குலமங்கலம் குதிரை கோவில் இத்தொகுதியில்தான் உள்ளது.
தற்போதைய எம்.எல்.ஏ அமைச்சராக இருப்பதால், தொகுதிக்குத் தேவையான அடிப்படை வசதிகள் மற்றும் சாலை மேம்பாட்டுப் பணிகள் குறிப்பிடத்தக்க அளவில் செய்யப்பட்டுள்ளன.
விவசாயப் பொருட்களுக்கான (குறிப்பாக முந்திரி) முறையான கொள்முதல் நிலையங்கள் மற்றும் குளிர்பதனக் கிடங்குகள் அமைக்கப்பட வேண்டும் என்பது நீண்ட கால கோரிக்கையாக உள்ளது.
இதுரை வெற்றி பெற்றோர்:
1957 சின்னையா மற்றும் அருணாச்சல தேவர் இந்திய தேசிய காங்கிரசு
1962 பி. முருகையன் திராவிட முன்னேற்றக் கழகம்
1967 கே. வி. சுப்பையா திராவிட முன்னேற்றக் கழகம்
1971 கே. வி. சுப்பையா திமுக
1977 த. புஷ்பராஜூ காங்கிரசு
1980 பி. திருமாறன் அதிமுக
1984 அ. வெங்கடாசலம் அதிமுக
1989 கே. சந்திரசேகரன் திமுக
1991 எஸ். சண்முகநாதன் அதிமுக
1996 அ. வெங்கடாசலம் சுயேச்சை
2001 அ. வெங்கடாசலம் அதிமுக
2006 எஸ். ராஜசேகரன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி
2011 கு. ப. கிருஷ்ணன் அதிமுக
2016 சிவ. வீ. மெய்யநாதன் திமுக
2021 சிவ. வீ. மெய்யநாதன் திமுக



